விம்பிள்டன் டென்னிஸ்: இறுதிப் போட்டியில் அல்காரஸ்-ஜோகோவிச் மோதல்


விம்பிள்டன் டென்னிஸ்: இறுதிப் போட்டியில் அல்காரஸ்-ஜோகோவிச் மோதல்
x

விம்பிள்டன் டென்னிஸ் இறுதிப் போட்டியில் அல்காரஸ் மற்றும் ஜோகோவிச் ஆகியோர் மோத உள்ளனர்.

லண்டன்,

'கிராண்ட்ஸ்லாம்' என்ற உயரிய அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியன் கார்லஸ் அல்காரஸ் (ஸ்பெயின்) 6-7 (1-7), 6-3, 6-4, 6-4 என்ற செட் கணக்கில் உலக தரவரிசையில் 5-வது இடத்தில் இருக்கும் மெட்விடேவை (ரஷியா) தோற்கடித்து தொடர்ந்து 2-வது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

இதைத் தொடர்ந்து மற்றொரு அரைஇறுதி ஆட்டத்தில் ஜோகோவிச் (செர்பியா) மற்றும் முசெட்டி (இத்தாலி) ஆகியோர் மோதினர். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஜோகோவிச் 6-4, 7-6(2), 6-4 என்ற செட் கணக்கில் முசெட்டியை வீழ்த்தி 10-வது முறையாக விம்பிள்டன் டென்னிஸ் இறுதிப் போட்டிக்குள் நுழைந்தார். இதையடுத்து நாளை நடக்கும் விம்பிள்டன் டென்னிஸ் இறுதிப் போட்டியில் அல்காரஸ் மற்றும் ஜோகோவிச் ஆகியோர் மோத உள்ளனர்.


Next Story