அமெரிக்க ஓபன் டென்னிஸ்: ஜெசிகா பெகுலா 3வது சுற்றுக்கு முன்னேற்றம்


அமெரிக்க ஓபன் டென்னிஸ்: ஜெசிகா பெகுலா 3வது சுற்றுக்கு முன்னேற்றம்
x

Image Courtesy: AFP  

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது.

நியூயார்க்,

பல முன்னணி வீரர் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றுள்ள அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது.

இந்த தொடரில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற 2வது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னணி வீராங்கனையான ஜெசிகா பெகுலா (அமெரிக்கா), சகநாட்டவரான சோபியா கெனின் உடன் மோதினார்.

இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜெசிகா பெகுலா 7-6 (7-4), 6-3 என்ற செட் கணக்கில் சோபியா கெனினை வீழ்த்தி 3வது சுற்றுக்கு முன்னேறினார். நாளை நடைபெறும் 3வது சுற்று ஆட்டத்தில் ஜெசிகா பெகுலா, ஸ்பெயினின் ஜெசிகா பவுசாஸ் மனிரோ உடன் மோத உள்ளார்.


Next Story