அமெரிக்க ஓபன் டென்னிஸ்: கோகோ காப் 4-வது சுற்றுக்கு முன்னேற்றம்


அமெரிக்க ஓபன் டென்னிஸ்: கோகோ காப் 4-வது சுற்றுக்கு முன்னேற்றம்
x

கோகோ காப் 4-வது சுற்று ஆட்டத்தில் எம்மா நவரோ உடன் பலப்பரீட்சை நடத்த உள்ளார்.

நியூயார்க்,

'கிராண்ட்ஸ்லாம்' என்ற உயரிய அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியனான கோகோ காப் (அமெரிக்கா), உக்ரைனின் ஸ்விடோலினா உடன் பலப்பரீட்சை நடத்தினார்.

இந்த ஆட்டத்தில் கோகோ காப் 3-6, 6-3, 6-3 என்ற செட் கணக்கில் ஸ்விடோலினாவை வீழ்த்தி 4-வது சுற்றுக்கு தகுதி பெற்றார். இவர் 4-வது சுற்று ஆட்டத்தில் எம்மா நவரோ உடன் பலப்பரீட்சை நடத்த உள்ளார்.


Next Story