சோபியா ஓபன் டென்னிஸ் தொடர் - டென்மார்க் வீரர் ஹோல்ஜர் ரூன் கால் இறுதி சுற்றுக்கு முன்னேற்றம்


சோபியா ஓபன் டென்னிஸ் தொடர் - டென்மார்க் வீரர் ஹோல்ஜர் ரூன் கால் இறுதி சுற்றுக்கு முன்னேற்றம்
x

சோபியா ஓபன் டென்னிஸ் தொடரின் கால் இறுதி சுற்றுக்கு டென்மார்க் வீரர் ஹோல்ஜர் ரூன் முன்னேறியுள்ளார்.

சோபியா,

பல்கேரியா நாட்டின் தலைநகர் சோபியாவில் சோபியா ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் 2-ம் சுற்று ஆட்டத்தில் இத்தாலி வீரர் லாரன்சோ உடன் டென்மார்க் வீரர் ஹோல்ஜர் ரூன் மோதினார்.

தொடக்கம் முதல் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 6-7, 6-4, 6-3 என்ற செட் கணக்கில் ரூன் வெற்றி பெற்றார். இதைத் தொடர்ந்து இன்று இரவு நடைபெறும் கால் இறுதி ஆட்டத்தில் பெலாரஸ் வீரர் இவாஷ்கா உடன் ஹோல்ஜர் ருன் மோத உள்ளார்.


Next Story