ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் ஜோகோவிச், சினெர்
ஷாங்காய் மாஸ்டர்ஸ் இறுதிப் போட்டியில் நோவக் ஜோகோவிச், ஜானிக் சினெரை எதிர்கொள்கிறார்.
ஷாங்காய்,
ஷாங்காய் மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி சீனாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஒற்றையர் அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் 'நம்பர் ஒன்' வீரரான இத்தாலியின் ஜானிக் சினெர் 6-4, 7-5 என்ற நேர் செட்டில் 33-ம் நிலை வீரரான தாமஸ் மசாக்கை (செக்குடியரசு) தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
இந்த வெற்றியின் மூலம் சினெர் இந்த ஆண்டு இறுதிவரை தரவரிசையில் முதலிடத்தில் நீடிப்பார். இத்தகைய பெருமையை பெறும் முதல் இத்தாலி வீரர் சினெர் ஆவார்.
மற்றொரு அரைஇறுதி ஆட்டத்தில் 4 முறை சாம்பியனான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் 6-4, 7-6 (8-6) என்ற நேர் செட்டில் டெய்லர் பிரிட்சை (அமெரிக்கா) வீழ்த்தினார். இந்த ஆட்டம் ஒரு மணி 56 நிமிடம் நீடித்தது. இந்நிலையில் இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் சினெர்- ஜோகோவிச் ஆகியோர் மோத உள்ளனர்.
Related Tags :
Next Story