மியாமி ஓபன் டென்னிஸ்: ரைபகினா, கிவிடோவா இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்


மியாமி ஓபன் டென்னிஸ்: ரைபகினா, கிவிடோவா இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்
x

image courtesy: Miami Open twitter

மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது.

மியாமி,

மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் விம்பிள்டன் சாம்பியனும், உலக தரவரிசையில் 7-வது இடத்தில் இருப்பவருமான எலினா ரைபகினா (கஜகஸ்தான்) 7-6 (7-3), 6-4 என்ற நேர்செட்டில் 3-ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் ஜெசிகா பெகுலாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

சர்வதேச போட்டியில் ரைபகினா தொடர்ச்சியாக பெற்ற 13-வது வெற்றி இதுவாகும். இந்த ஆட்டத்தில் ரைபகினா எதிராளி எதிர்கொள்ள முடியாத அளவுக்கு 10 ஏஸ் சர்வீஸ்கள் போட்டு அசத்தினார். இதன் மூலம் 2016-ம் ஆண்டுக்கு பிறகு ஒரு தொடரில் 5 ஆட்டங்களில் தொடர்ச்சியாக 10 மற்றும் அதற்கு அதிகமான ஏஸ் சர்வீஸ் வீசிய முதல் வீராங்கனை என்ற பெருமையை ரைபகினா பெற்றார்.

அதேபோல் இன்று நடைபெற்ற அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் 2 முறை விம்பிள்டன் பட்டம் வென்றவரான பெட்ரா கிவிடோவா (செக்குடியரசு) 7-5, 6-4 என்ற செட் கணக்கில் சொரானா சிர்ஸ்டியாவை (ரோமானியா) சாய்த்து இறுதிபோட்டிக்குள் முதல்முறையாக நுழைந்தார்.

நாளை நடைபெறவுள்ள இறுதிப்போட்டியில் எலினா ரைபகினா, பெட்ரா கிவிடோவா இருவரும் பலப்பரீட்சை நடத்துகின்றனர்.


Next Story