மியாமி ஓபன் டென்னிஸ்; ஆண்கள் ஒற்றையர் பிரிவில் டிமிட்ரோவ் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்
நாளை மறுநாள் நடைபெறும் இறுதிப்போட்டியில் கிரிகோர் டிமிட்ரோவ் - ஜன்னிக் சின்னெர் ஆகியோர் மோத உள்ளனர்.
மியாமி,
அமெரிக்காவில் மியாமி ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகின்றன. இந்த தொடரில் இன்று ஆண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி ஆட்டங்கள் நடைபெற்றது. இதில் ஒரு அரையிறுதி ஆட்டத்தில் பல்கேரியாவின் கிரிகோர் டிமிட்ரோவ், ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவை எதிர்கொண்டார்.
இந்த ஆட்டத்தின் முதல் செட்டை 6-4 என்ற புள்ளிக்கணக்கில் கைப்பற்றிய டிமிட்ரோவ், 2வது செட்டை 6-7 (4-7) என்ற புள்ளிக்கணக்கில் இழந்தார். இதையடுத்து வெற்றியாளரை தீர்மானிக்கும் 3வது செட்டில் பரபரப்பு ஏற்பட்டது.
பரபரப்பாக நடைபெற்ற 3வது செட்டில் 6-4 என்ற புள்ளிக்கணக்கில் அலெக்சாண்டர் ஸ்வெரேவை வீழ்த்தி டிமிட்ரோவ் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். நாளை மறுநாள் நடைபெறும் இறுதிப்போட்டியில் கிரிகோர் டிமிட்ரோவ் - ஜன்னிக் சின்னெர் ஆகியோர் மோத உள்ளனர்.
Related Tags :
Next Story