பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: அல்காரஸ் 3-வது சுற்றுக்கு முன்னேற்றம்


பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: அல்காரஸ் 3-வது சுற்றுக்கு முன்னேற்றம்
x

image courtesy: AFP

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் அல்காரஸ் 3-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

பாரீஸ்,

'கிராண்ட்ஸ்லாம்' போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பாரீஸ் நகரில் நடந்து வருகிறது. 4-வது நாளான நேற்றும் மழை குறுக்கிட்ட நிலையில், மேற்கூரை வசதி கொண்ட மைதானங்களில் மட்டும் போட்டி நடைபெற்றது.

இதன்படி ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் 3-ம் நிலை வீரரான கார்லஸ் அல்காரஸ் (ஸ்பெயின்) 6-3, 6-4, 2-6, 6-2 என்ற செட் கணக்கில் நெஸ்பர் டி ஜோங்கை (நெதர்லாந்து) வீழ்த்தி 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.


Next Story