யுவா கபடி தொடரில் வேல்ஸ் அணி சாம்பியன்


யுவா கபடி தொடரில் வேல்ஸ் அணி  சாம்பியன்
x

வேல்ஸ் அணி, கற்பகம் பல்கலைக்கழகத்தை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை வசப்படுத்தியது.

சென்னை,

யுவா கபடி தொடரின் அங்கமாக தமிழக கிளப் அணிகளுக்கு இடையிலான கபடி சாம்பியன்ஷிப் போட்டி சென்னையை அடுத்த பொன்னேரியில் உள்ள வேலம்மாள் சர்வதேச பள்ளி மைதானத்தில் நடந்தது. இதில் நேற்று நடந்த இறுதிப்போட்டியில் வேல்ஸ் (சென்னை) - கற்பகம் (கோவை) பல்கலைக்கழக அணிகள் மோதின. அபாரமாக ஆடிய வேல்ஸ் அணி 49-19 என்ற புள்ளி கணக்கில் கற்பகம் பல்கலைக்கழகத்தை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை வசப்படுத்தியது. வேல்ஸ் அணியில் சதீஷ் கண்ணன் ரைடிலும், சக்திவேல் டேக்கிளிலும் அசத்தினர்.

தொடரின் சிறந்த ரைடராக கங்காநாத் கிருஷ்ணனும் (கே.ஆர்.ஸ்போர்ட்ஸ் அணி), சிறந்த டிபன்டராக சக்திவேல் தங்கவேலும் (கற்பகம் பல்கலைக்கழகம்) தேர்வு செய்யப்பட்டு தலா ரூ.50 ஆயிரம் வழங்கப்பட்டது. பரிசளிப்பு விழாவுக்கு அரியானா ஸ்டீலர்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் மன்பிரீத் சிங் சிறப்பு விருந்தினராக வருகை தந்து பரிசுக் கோப்பையை வழங்கினார். சாம்பியன் பட்டம் வென்ற வேல்ஸ் அணிக்கு ரூ.20 லட்சமும், 2-வது இடம் பெற்ற கற்பகம் அணிக்கு ரூ.10 லட்சமும் பரிசாக வழங்கப்பட்டது.


Next Story