நீரஜ் சோப்ராவை நேரில் சந்தித்து வாழ்த்திய சுனில் சேத்ரி


நீரஜ் சோப்ராவை நேரில் சந்தித்து வாழ்த்திய சுனில் சேத்ரி
x

இந்தியாவின் நீரஜ் சோப்ரா 89.45 மீட்டர் தூரத்துடன் 2-வது இடம் பெற்று வெள்ளிப் பதக்கம் வென்றார்.

பாரீஸ்,

33-வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது. இதில் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் இறுதி சுற்றில் கடந்த டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற இந்தியாவின் நீரஜ் சோப்ரா உள்பட 12 வீரர்கள் பங்கேற்றனர்.மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெற்ற இந்த போட்டியில் பாகிஸ்தானின் அர்ஷத் நதீம் வியப்பூட்டும் வகையில் 92.97 மீட்டர் தூரம் எறிந்து புதிய ஒலிம்பிக் சாதனை படைத்தார். அதோடு அவர் தங்கப்பதக்கத்தையும் தட்டிச் சென்றார்

நீரஜ் சோப்ரா தனது அதிகபட்சமாக 89.45 மீட்டர் தூரம் வீசினார். இதனால் இந்தியாவின் நீரஜ் சோப்ரா 89.45 மீட்டர் தூரத்துடன் 2-வது இடம் பெற்று வெள்ளிப் பதக்கம் வென்றார்.

இந்த நிலையில், வெள்ளிப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவை, இந்திய கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் சுனில் சேத்ரி பாரீசில் இன்று நேரில் சந்தித்தார். மேலும் வெள்ளிப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு சுனில் சேத்ரி வாழ்த்து தெரிவித்தார்.


Next Story