மாநில வில்வித்தை போட்டி: சென்னை கல்லூரி மாணவர் 4 பதக்கம் வென்றார்


மாநில வில்வித்தை போட்டி: சென்னை கல்லூரி மாணவர் 4 பதக்கம் வென்றார்
x

15-வது மாநில வில்வித்தை போட்டியில் சென்னை கல்லூரி மாணவர் பி.சதீஷ் குமார் 4 பதக்கங்களை வென்றுள்ளார்.

சென்னை,

15-வது மாநில வில்வித்தை போட்டி சென்னை அடையாறில் உள்ள எம்.ஜி.ஆர்.ஜானகி பெண்கள் கல்லூரியில் நடந்து வருகிறது.

இதில் ஆண்களுக்கான சீனியர் ரிகர்வ் பிரிவு உள்ளரங்க போட்டியில் சென்னை சோழிங்கநல்லூரியில் உள்ள செயின்ட் ஜோசப்ஸ் என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் பி.சதீஷ் குமார் 300-க்கு 274 புள்ளிகள் குவித்து தங்கப்பதக்கத்தை தனதாக்கினார்.

இதேபிரிவில் திறந்த வெளியில் நடந்த பந்தயத்தில் அவர் வெள்ளிப்பதக்கம் வென்றார். அத்துடன் அவர் ஜூனியர் ரிகர்வ் அணிகள் பிரிவிலும், கலப்பு அணிகள் பிரிவிலும் வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றினார்.


Next Story