உலகக் கோப்பை ஸ்னூக்கர் போட்டி: இந்திய வீராங்கனை அனுபமா தங்கப்பதக்கம் வென்றார்

Image Courtesy : @WomensSnooker twitter


சென்னையை சேர்ந்த அனுபமா வென்ற 2-வது தங்கப்பதக்கம் இதுவாகும்.
சென்னை,
உலகக் கோப்பை பெண்கள் ஸ்னூக்கர் போட்டி தாய்லாந்தின் தலைநகர் பாங்காக்கில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த 21 வயதுக்கு உட்பட்ட பெண்கள் ஒற்றையர் பிரிவில் இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனை அனுபமா 3-2 என்ற கணக்கில் தாய்லாந்து வீராங்கனை பிளாய்சோம்பூ லோகிபாங்கை தோற்கடித்து தங்கப்பதக்கத்தை தனதாக்கினார்.
சென்னையை சேர்ந்த அனுபமா வென்ற 2-வது தங்கப்பதக்கம் இதுவாகும். ஏற்கனவே அவர் அணிகள் பிரிவில் மத்தியபிரதேசத்தின் அமீ காமினியுடன் இணைந்து தங்கப்பதக்கம் வென்று இருந்தார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire