கலப்பு தற்காப்பு கலை போட்டியில் வெற்றி.. சாதனை படைத்த இந்திய மல்யுத்த வீரர் சங்ராம் சிங்


கலப்பு தற்காப்பு கலை போட்டியில் வெற்றி.. சாதனை படைத்த இந்திய மல்யுத்த வீரர் சங்ராம் சிங்
x

image courtesy:instagram/sangramsingh_wrestler

சங்ராம் சிங் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாகிஸ்தான் வீரரை 1 நிமிடம் 30 வினாடிகளில் வீழ்த்தினார்.

திபிலிசி,

கலப்பு தற்காப்பு கலை போட்டியில் (எம்.எம்.ஏ.) வெற்றியை பெற்ற முதல் இந்திய ஆண் மல்யுத்த வீரர் என்ற சாதனையை சங்ராம் சிங் படைத்துள்ளார்.

காமா சர்வதேச சண்டை சாம்பியன்ஷிப் தொடரில் தனது முதல் போட்டியில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாகிஸ்தான் வீரரான அலி ராசா நசீரை வெறும் 1 நிமிடம் 30 வினாடிகளில் தோற்கடித்து சங்ராம் சிங் வெற்றி பெற்றார். இதன் மூலம் இவர் இந்த சாதனையை படைத்துள்ளார்.

வெற்றிக்கு பின் சங்ராம் சிங் பேசுகையில், "இந்த வெற்றியை இந்தியாவுக்குக் கொண்டு வந்ததில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன். இந்த வெற்றியானது இந்தியாவில் சிறந்த எதிர்காலத்தைக் கொண்ட எம்எம்ஏவின் திசையில் ஒரு படியாகும். இது தனிப்பட்ட சாதனைகளுக்கு அப்பாற்பட்டது. உலக அளவிலான அங்கீகாரம், கலப்பு தற்காப்புக் கலைகளை ஆதரிக்கும் திட்டங்களைச் செயல்படுத்த இந்திய அரசாங்கத்தை ஊக்குவிக்கும் மற்றும் இந்த விளையாட்டைத் தொடர இளைஞர்களை ஊக்குவிக்கும் என்பது எனது நம்பிக்கை. இது ஏராளமான இளம் விளையாட்டு வீரர்களை தங்கள் உள் வலிமையைக் கண்டறியவும், மகத்துவத்திற்காக பாடுபடவும், கலப்பு தற்காப்பு கலை உலகில் உள்ள தடைகளை கடக்கவும் ஊக்குவிக்கும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை," என்று கூறினார்.


Next Story