டைமண்ட் லீக் இறுதி சுற்று: தங்கம் வெல்லும் முனைப்பில் நீரஜ் சோப்ரா


டைமண்ட் லீக் இறுதி சுற்று: தங்கம் வெல்லும் முனைப்பில் நீரஜ் சோப்ரா
x

கோப்புப்படம்

டைமண்ட் லீக் இறுதி சுற்றில் முதலிடம் பிடிக்கும் வீரர்களுக்கு சாம்பியன் கோப்பையுடன் ரூ.25 லட்சம் பரிசுத்தொகையும் வழங்கப்படுகிறது.

பிரஸ்சல்ஸ்,

முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் டைமண்ட் லீக் தடகள சாம்பியன்ஷிப் போட்டி இறுதிகட்டத்தை எட்டிவிட்டது. உலகம் முழுவதும் 14 சுற்றாக நடத்தப்பட்ட இந்த லீக்கின் இறுதி சுற்று பெல்ஜியம் தலைநகர் பிரஸ்சல்சில் இன்றும், நாளையும் நடக்கிறது.

இறுதி சுற்றுக்கு 2 இந்திய வீரர்கள் தகுதி பெற்றுள்ளனர். ஈட்டி எறிதலில் பாரீஸ் ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய வீரர் நீரஜ் சோப்ரா களம் இறங்குகிறார். இதுவரை 90 மீட்டர் இலக்கை கடக்காத சோப்ரா இந்த முறை அதை தாண்டி தங்கம் வெல்வாரா..? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. கிரனடாவின் ஆண்டர்சன் பீட்டர்ஸ் (29 புள்ளி), ஜெர்மனியின் ஜூலியன் வெபர் (21), செக் குடியரசின் ஜாகுப் வாடில்ச் (16) ஆகியோர் சவால் தர உள்ளனர்.

3 ஆயிரம் மீட்டர் ஸ்டீபிள்சேஸ் ஓட்டத்தில் ஏற்கனவே தகுதிபெற்ற சில வீரர்கள் விலகியதால் இந்தியாவின் அவினாஷ் சாப்லேவுக்கு அதிர்ஷ்டம் அடித்தது. அவர் 12 வீரர்களில் ஒருவராக தயாராகி வருகிறார்.

முதலிடம் பிடிக்கும் வீரர்களுக்கு சாம்பியன் கோப்பையுடன் ரூ.25¼லட்சம் பரிசுத்தொகையாக வழங்கப்படும். அத்துடன் அடுத்த ஆண்டு நடக்கும் உலக தடகள சாம்பியன்ஷிப்புக்கும் நேரடியாக தகுதி பெறுவார்கள்.


Next Story