பாராஒலிம்பிக்: இந்திய வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் இன்றைய போட்டிகள்


பாராஒலிம்பிக்: இந்திய வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் இன்றைய போட்டிகள்
x

பாராஒலிம்பிக் தொடரில் இன்று 6-வது நாள் போட்டிகள் நடைபெற உள்ளன.

பாரீஸ்,

மாற்றுத்திறனாளிகளுக்கான 17-வது பாரா ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது. பதக்கப்பட்டியலில் சீனா 33 தங்கம் உள்பட 71 பதக்கத்துடன் முதலிடம் வகிக்கிறது. இந்தியா ஒரு தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம் என 7 பதக்கத்துடன் 27-வது இடத்தில் உள்ளது.

இந்நிலையில் 6-வது நாளான இன்று இந்திய வீரர் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்கும் போட்டிகளின் முழு விவரம் பின்வருமாறு:-

மதியம் 12:30 மணி - பாரா துப்பாக்கி சுடுதல் - பி3 - கலப்பு அணி பிரிவு தகுதி சுற்று - நிஹால் சிங்/அமீர் அகமது பட்

மதியம் 1:30 மணி - பாரா தடகளம் - ஆண்கள் வட்டு எறிதல் - இறுதிப் போட்டி - யோகேஷ் கதுனியா

மதியம்1:40 மணி - பாரா பேட்மிண்டன் - கலப்பு இரட்டையர் வெண்கலப் பதக்கப் போட்டி - சிவராஜன் சோலைமலை/நித்யா ஸ்ரீ சுமதி சிவன் - சுபன்/ரினா மார்லினா (இந்தோனேசியா)

மாலை 3:30 மணி - பாரா பேட்மிண்டன் - ஆண்கள் ஒற்றையர் பிரிவு தங்கப் பதக்கப் போட்டி - நிதேஷ் குமார் - டேனியல் பெத்தேல் (கிரேட் பிரிட்டன்)

மாலை 4:30 மணி - பாரா துப்பாக்கி சுடுதல் - பி3 - கலப்பு 25 மீட்டர் பிஸ்டல் தகுதி சுற்று - நிஹால் சிங்/அமீர் அகமது பட்

இரவு 8:00 மணி முதல் - பாரா பேட்மிண்டன் - பெண்கள் ஒற்றையர் பதக்கப் போட்டிகள் - துளசிமதி முருகேசன் (தங்கப்பதக்க போட்டி), மனிஷா ராமதாஸ் (வெண்கல பதக்க போட்டி)

இரவு 8:15 மணி - பாரா துப்பாக்கி சுடுதல் - கலப்பு 25 மீட்டர் பிஸ்டல் இறுதிப்போட்டி - நிஹால் சிங், அமீர் அகமது பட் (தகுதிச்சுற்றில் வெற்றி பெற்றால்)

இரவு 8:40 மணி - பாரா வில்வித்தை - கலப்பு அணி காம்பவுண்ட் காலிறுதி சுற்று - ஷீத்தல் தேவி/ராகேஷ் குமார் (இவர்கள் தகுதி பெற்றால் இரவு 9.40 மணியளவில் அரையிறுதி சுற்றில் களமிறங்குவார்கள்)

இரவு 9:40 மணி - பாரா பேட்மிண்டன் - ஆண்கள் ஒற்றையர் தங்கப் பதக்கப் போட்டி - சுஹாஸ் யதிராஜ் - லூகாஸ் மஸூர் (பிரான்ஸ்)

இரவு 9:40 மணி - பாரா பேட்மிண்டன் - ஆண்கள் ஒற்றையர் வெண்கலப் பதக்கப் போட்டி - சுஹாஸ் யதிராஜ் - ப்ரெடி செட்டியவான் (இந்தோனேசியா)

இரவு 10:30 மணி - பாரா தடகளம் - ஆண்களுக்கான ஈட்டி எறிதல் - இறுதிப் போட்டி - சுமித் ஆன்டில், சந்தீப் சஞ்சய் சர்கார், சந்தீப்

இரவு 10:34 மணி - பாரா தடகளம் - பெண்களுக்கான வட்டு எறிதல் - இறுதிப் போட்டி - காஞ்சன் லக்கானி

இரவு 11:50 மணி - பாரா தடகளம் - பெண்கள் 400 மீட்டர் - சுற்று 1 - தீப்தி ஜீவன்ஜி


Next Story