ஈட்டி எறிதலின் போது தவறி கீழே விழுந்த நீரஜ் சோப்ரா - பார்வையாளர்கள் அதிர்ச்சி - வைரல் வீடியோ

Image Courtesy : Twitter @teeny_tiny_nee
நீரஜ் சோப்ரா தவறி கீழே விழுந்தது பார்வையாளர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
ஹெல்சின்கி,
பின்லாந்தில் ஈட்டி எறிதல் போட்டி இன்று நடந்தது. இதில், ஒலிம்பிக்கில் தங்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்த இந்திய வீரர் நீரஜ் சோப்ரா கலந்து கொண்டார். அவர் முதல் முயற்சியில் 86.69 மீட்டர் தூரம் ஈட்டி வீசினார்.
இந்த இலக்கை பின்னர் வந்த பிற போட்டியாளர்களால் முறியடிக்க முடியவில்லை. 2-வது முயற்சியில் சோப்ரா தவறு செய்த நிலையில், 3வது முயற்சியின்போது, அவர் தவறி கீழே விழுந்தது பார்வையாளர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
எனினும் அதில் இருந்து மீண்டு, அவர் காயமின்றி எழுந்து சென்றார். போட்டியின்போது தொடர் மழை பெய்தது. இதனால், ஈட்டி எறியும் வீரர்கள் அனைவருக்கும் சற்று சிரமம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story






