மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: இந்திய வீரர் பிரனாய் சாம்பியன்


மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: இந்திய வீரர் பிரனாய்  சாம்பியன்
x

Image Courtesy : PTI 

மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டியில் பிரனாய் சாம்பியன் பட்டம் வென்றார்.

கோலாலம்பூர்,

மலேசியா மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி கோலாலம்பூரில் நடந்து வருகிறது.இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் இன்று நடந்த ஆட்டத்தில் இந்தியாவின் பிரனாய் , சீனாவின் வெங் ஹாங் யாங் ஆகியோர் மோதினர்.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் 21-19, 13-21, 21-18.என்ற செட் கணக்கில் பிரனாய் வெற்றி பெற்றார். இதனால் மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டியில் பிரனாய் சாம்பியன் பட்டம் வென்றார்.


Next Story