லைவ் அப்டேட்ஸ்; குதிரையேற்றத்தில் இந்தியாவிற்கு வெண்கல பதக்கம்..!


தினத்தந்தி 27 Sept 2023 6:58 AM IST (Updated: 30 Sept 2023 12:21 PM IST)
t-max-icont-min-icon

ஆசிய விளையாட்டு போட்டியில் குதிரையேற்றம் போட்டியில் இந்தியாவுக்கு வெண்கலம் கிடைத்துள்ளது.


Live Updates

  • 27 Sept 2023 6:34 PM IST

    3x3 கூடைப்பந்து

    கூடைப்பந்து 3x3 ஆண்கள் ரவுண்ட் ராபின் பிரிவு ஏ போட்டி 33ல் இந்தியா - சீனா மோதின. இப்போட்டியில் இந்தியாவை 22-8 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி சீனா வெற்றிபெற்றது.

  • 27 Sept 2023 5:53 PM IST

    வுஷூ:-

    வுஷூ பெண்கள் 60 கிலோ எடைப்பிரிவில் அரையிறுதி சுற்றில் இந்தியா - வியட்நாம் மோதின. இப்போட்டியில் வியட்நாம் வீராங்கனையை 2-0 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி இந்திய வீராங்கனை ரோஷிபினா தேவி அபார வெற்றிபெற்றார்.

    இப்போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம் இந்திய வீராங்கனை தேவி இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளார். இறுதிப்போட்டி நாளை நடைபெற உள்ள நிலையில் இந்திய வீராங்கனை தேவி தங்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • 27 Sept 2023 5:45 PM IST

    குத்துச்சண்டை:

    குத்துச்சண்டை பெண்கள் 45-50 கிலோ எடை பிரிவில் பிரிலிம்ஸ் ரவுண்ட் ஆப் 16 சுற்றில் இந்தியா - தென்கொரியா அணிகள் மோதின. இப்போட்டியில் தென்கொரிய வீராங்கனையை 5-0 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி இந்திய வீராங்கனை ஜரீன் நிகாத் வெற்றிபெற்றார்.  

  • 27 Sept 2023 5:13 PM IST

    டேபிள் டென்னிஸ்

    டேபிள் டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவு ரவுண்ட் ஆப் 32 சுற்று 42ம் போட்டியில் இந்தியா - சீனா மோதின. இப்போட்டியில் சீனாவை 3-0 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி இந்திய ஜோடி ஹர்மீத் ராஜுல், ஸ்ரீஜா வெற்றிபெற்றனர்.

  • 27 Sept 2023 4:36 PM IST

    டேபிள் டென்னிஸ்:

    டேபிள் டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவு ரவுண்ட் ஆப் 32 சுற்று 37ம் போட்டியில் இந்தியா - தாய்லாந்து மோதின. பரபரப்பாக நடந்த இப்போட்டியில் தாய்லாந்தை 3-1 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி இந்திய ஜோடி சத்யன் குனசேகரண், மனிகா பத்ரா வெற்றிபெற்றனர்.

  • 27 Sept 2023 4:30 PM IST

    டேபிள் டென்னிஸ்:

    டேபிள் டென்னிஸ் ஆண்கள் இரட்டையர் பிரிவு ரவுண்ட் ஆப் 64 சுற்றின் 6ம் போட்டியில் இந்தியா - தாய்லாந்து மோதின. இப்போட்டியில் தாய்லாந்தை 3-2 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்திய இந்தியா அபார வெற்றிபெற்றது.

  • 27 Sept 2023 4:02 PM IST

    ஸ்குவாஷ்:

    ஸ்குவாஷ் பெண்கள் குழு பிரிவு பி 34வது போட்டியில் இந்தியா - சீனா மோதின. இப்போட்டியில் சீனாவை 3-0 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி இந்திய பெண்கள் அணி அபார வெற்றிபெற்றது.

  • 27 Sept 2023 3:57 PM IST

    டென்னிஸ்:

    டென்னிஸ் பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றின் 3ம் போட்டியில் இந்திய வீராங்கனை அங்கிதாவை 3-6, 6-4, 6-4 என்ற செட் கணக்கில் வீழ்த்தி ஜப்பான் வீராங்கனை ஹருகா வெற்றிபெற்றார்.

  • 27 Sept 2023 3:40 PM IST

    இஸ்போர்ட்ஸ்

    இஸ்போர்ட்ஸ் லீக் ஆப் லெஜண்ட்ஸ் காலிறுதி சுற்று 4ல் இந்தியா - வியட்நாம் அணிகள் மோதின. இப்போட்டியில் இந்தியாவை 2-0 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி வியட்நாம் அபார வெற்றிபெற்றது.

  • 27 Sept 2023 3:20 PM IST

    குத்துச்சண்டை

    குத்துச்சண்டை ஆண்கள் 57-63.5 கிலோ பிரிவு ரவுண்ட் ஆப் 16 சுற்றில் கஜகஸ்தான் வீரரிடம் 5-0 என்ற புள்ளி கணக்கில் இந்திய வீரர் சிவா தபா தோல்வியடைந்தார். அதேபோல், ஆண்கள் 80-92 கிலோ பிரிவு ரவுண்ட் ஆப் 16 சுற்றில் உஸ்பெகிஸ்தான் வீரரிடம் 5-0 என்ற புள்ளி கணக்கில் இந்திய வீரர் சஞ்ஜித் தோல்வியடைந்தார்.   


Next Story