லைவ் அப்டேட்ஸ்; குதிரையேற்றத்தில் இந்தியாவிற்கு வெண்கல பதக்கம்..!


தினத்தந்தி 27 Sept 2023 6:58 AM IST (Updated: 30 Sept 2023 12:21 PM IST)
t-max-icont-min-icon

ஆசிய விளையாட்டு போட்டியில் குதிரையேற்றம் போட்டியில் இந்தியாவுக்கு வெண்கலம் கிடைத்துள்ளது.


Live Updates

  • 28 Sept 2023 6:46 AM IST

    பேட்மிண்டன்:  இந்தியா மற்றும் மங்கோலியா இடையேயான மகளிர் பேட்மிண்டன் போட்டி நடந்து வருகிறது.

    பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் போட்டியில் இந்தியாவின் பி.வி. சிந்து தொடக்க ஆட்டத்தில் 21-2 என்ற புள்ளி கணக்கில் எளிதில் வெற்றி பெற்றுள்ளார்.

  • 28 Sept 2023 6:45 AM IST

    பேட்மிண்டன்:  இந்தியா மற்றும் மங்கோலியா இடையேயான மகளிர் பேட்மிண்டன் போட்டி நடந்து வருகிறது.

  • 27 Sept 2023 8:29 PM IST

    டென்னிஸ்:

    டென்னிஸ் கலப்பு இரட்டையர் ரவுண்ட் ஆப் 3 போட்டி 8ல் இந்தியா - ஜப்பான் மோதின. இப்போட்டியில் ஜப்பானை 6-3, 6-4 என்ற நேர் செட்களில் வீழ்த்தி இந்தியா வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் நாளை நடைபெற உள்ள காலிறுதி சுற்றுக்கு இந்தியா முன்னேறியுள்ளது. நாளை நடைபெற உள்ள ஆட்டத்தில் இந்தியா கஜகஸ்தானை எதிர்கொள்ள உள்ளது.

  • 27 Sept 2023 8:25 PM IST

    டென்னிஸ்:

    டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவு ரவுண்ட் 3 போட்டி 1ல் இந்தியா - பிலிப்பைன்ஸ் மோதின. இப்போட்டியில் இந்தியாவை 6-4, 6-4,10-8 என்ற செட்களில் வீழ்த்தி பிலிப்பைன்ஸ் வெற்றிபெற்றது.

  • 27 Sept 2023 8:15 PM IST

    குதிரையேற்றம்:-

    குதிரையேற்றம் டிரஸ்ஏஜ் பிரிவு இன்டர்மிடியேட் சுற்றில் இன்று நடந்த ஆட்டத்தில் இந்திய வீரர்/வீராங்கனைகள் ஹர்டே விபுல் ஷிடா முதல் இடத்தையும், அனுஷ் 2ம் இடத்தையும், திவ்யகீர்தி 11ம் இடத்தையும், சுதீப்தி கடைசி இடமான 32ம் இடத்தையும் பிடித்தனர்.  

  • 27 Sept 2023 7:55 PM IST

    பதக்க பட்டியலில் 7ம் இடத்தில் இந்தியா...!

    ஆசிய விளையாட்டு போட்டிகள் பதக்க பட்டியலில் இந்தியா 7ம் இடத்தில் உள்ளது. 5 தங்கம், 7 வெள்ளி, 10 வெண்கலம் என மொத்தம் 22 பதக்கங்களுடன் இந்தியா 7ம் இடத்தில் உள்ளது.

    போட்டிகள், பதக்க விவரம்

    கிரிக்கெட் - 1 தங்கம்

    குதிரையேற்றம் - 1 தங்கம்

    துடுப்பு படகு போட்டி - 2 வெள்ளி, 3 வெண்கலம்

    பாய்மரப்படகு - 1 வெள்ளி, 2 வெண்கலம்

    துப்பாக்கி சுடுதல் - 3 தங்கம், 4 வெள்ளி, 5 வெண்கலம்

    மொத்த பதக்க விவரம்

    தங்கம் - 5

    வெள்ளி - 7

    வெண்கலம் - 10

    மொத்தம் - 22

  • 27 Sept 2023 7:37 PM IST

    கூடைப்பந்து:

    கூடைப்பந்து பெண்கள் பிரிலிமினெரி ரவுண்ட் சுற்று ஏ போட்டி 6ல் இந்தியா - இந்தோனேசியா மோதின. இப்போட்டியில் இந்தோனேசியாவை 66-44 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி இந்தியா வெற்றிபெற்றது.

  • 27 Sept 2023 7:32 PM IST

    ஸ்குவாஷ்:

    ஸ்குவாஷ் ஆண்கள் குழு பிரிவு ஏ போட்டி 36-ல் இந்தியா - பாகிஸ்தான் மோதின. இப்போட்டியில் இந்தியாவை 2-1 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி பாகிஸ்தான் வெற்றிபெற்றது.

  • 27 Sept 2023 7:30 PM IST

    கைப்பந்து

    கைப்பந்து பெண்கள் பிரிலிமினெரி குரூப் ஏ பிரிவின் 25ம் போட்டியில் இந்தியா - ஹாங்காங் மோதின. இப்போட்டியில் இரு அணிகளும் 26-26 புள்ளிகள் பெற்றதால் போட்டி சமனில் முடிந்தது.

  • 27 Sept 2023 7:18 PM IST

    டென்னிஸ்:

    டென்னிஸ் ஆண்கள் இரட்டையர் பிரிவு காலிறுதி சுற்று போட்டி 4ல் இந்தியா - சீனா மோதின. பரபரப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் சீனாவை 6-1, 7-6 என்ற நேர் செட்களில் வீழ்த்தி இந்திய வீரர்கள் ராம்குமார், சகித் ஜோடி அபார வெற்றிபெற்றது. காலிறுதி சுற்றில் வெற்றிபெற்றதையடுத்து இந்தியா அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. நாளை நடைபெற உள்ள அரையிறுதி போட்டியில் இந்தியா, தென்கொரியாவை எதிர்கொள்ள உள்ளது.


Next Story