இந்திய குத்துச்சண்டை அணியின் வெளிநாட்டு பயிற்சியாளராக டிமிட்ருக் நியமனம்


இந்திய குத்துச்சண்டை அணியின் வெளிநாட்டு பயிற்சியாளராக  டிமிட்ருக் நியமனம்
x

இந்திய குத்துச்சண்டை அணியின் வெளிநாட்டு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்

புதுடெல்லி,

அயர்லாந்தைச் சேர்ந்த புகழ்பெற்ற குத்துச்சண்டை பயிற்சியாளர் டிமிட்ரி டிமித்ருக் (வயது 47), இந்திய குத்துச்சண்டை அணியின் வெளிநாட்டு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு அவரை பயிற்சியாளராக நியமித்து, இந்திய குத்துச்சண்டை கூட்டமைப்பு (பிஎஃப்ஐ) இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கடந்த 12 ஆண்டுகளாக அயர்லாந்து குத்துச்சண்டை சங்கம் மற்றும் அயர்லாந்து தேசிய ஜூனியர் மற்றும் இளைஞர் அணிகளின் பயிற்சியாளராக திறம்பட பணியாற்றியவர் டிமித்ருக்.

தனது பணிக்காலத்தில் அயர்லாந்து குத்துச்சண்டை அணியின் செயல் திறனை மேம்படுத்தியதிலும், இளம் வீரர்களை வளர்ப்பதிலும் முக்கிய பங்காற்றினார். இனி, அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு உலக சாம்பியன்ஷிப் உட்பட வரவிருக்கும் சர்வதேச போட்டிகளுக்கான இந்திய குத்துச்சண்டை ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகளை டிமித்ருக் வழிநடத்த உள்ளார்.




Next Story