சென்னை பல்கலைக்கழக தடகளம்: எம்.ஓ.பி.வைஷ்ணவா கல்லூரி வீராங்கனை புதிய சாதனை
5 கிலோ மீட்டர் நடைப்பந்தயத்தில் எம்.ஓ.பி.வைஷ்ணவா கல்லூரி வீராங்கனை எம். மோகவி புதிய போட்டி சாதனையுடன் தங்கப்பதக்கம் கைப்பற்றினார்.
சென்னை,
சென்னை பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட கல்லூரிகளுக்கான 54-வது டாக்டர் ஏ.எல். முதலியார் பொன்விழா நினைவு தடகள போட்டி நேரு ஸ்டேடியத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் 22-ந் தேதி வரை நடக்கிறது.
இந்த போட்டிக்கான பெண்கள் பிரிவு 5 கிலோ மீட்டர் நடைப்பந்தயம் நேற்று நடந்தது. இதில் எம்.ஓ.பி.வைஷ்ணவா கல்லூரி வீராங்கனை எம். மோகவி 25 நிமிடம் 45.16 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து புதிய போட்டி சாதனையுடன் தங்கப்பதக்கம் கைப்பற்றினார்.
இதற்கு முன்பு 2004-2005-ம் ஆண்டில் ஒய்.எம்.சி.ஏ.கல்லூரி வீராங்கனை எஸ்.அகிலா 28 நிமிடம் 34.03 வினாடியில் கடந்ததே சாதனையாக இருந்தது. அந்த சாதனையை தகர்த்து மோகவி புதிய சாதனை படைத்தார். எத்திராஜ் கல்லூரி வீராங்கனை நமீரா பஹிமா (28 நிமிடம் 17.74 வினாடி) வெள்ளிப்பதக்கமும், எஸ்.ஏ.கல்லூரி வீராங்கனை ஷாலு (30 நிமிடம் 36.25 வினாடி) வெண்கலப்பதக்கமும் பெற்றனர்.