லைவ்: ஆசிய விளையாட்டு - தடகள போட்டியில் இந்தியாவுக்கு அடுத்தடுத்து பதக்கங்கள்
மகளிர் 3,000 மீட்டர் ஸ்டீபிள்சேஸ் போட்டியில் இந்தியாவுக்கு வெள்ளி பதக்கம் கிடைத்துள்ளது
ஆசிய விளையாட்டில் 13 தங்கம், 24 வெள்ளி, 23 வெண்கலம் என மொத்தம் 60 பதக்கங்களுடன் இந்தியா பதக்க பட்டியலில் 4ம் இடத்தில் உள்ளது.
Live Updates
- 2 Oct 2023 6:56 PM IST
4x400m கலப்பு தொடர் ஓட்டத்தில் இந்தியாவுக்கு வெள்ளி பதக்கம் கிடைத்துள்ளது. பஹ்ரைன் தங்க பதக்கத்தை வென்றுள்ளது. இரண்டாம் இடம் பிடித்த இலங்கை தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் வெண்கலம் வென்ற இந்தியாவுக்கு வெள்ளி பதக்கம் பெறும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
- 2 Oct 2023 6:37 PM IST
4x400m கலப்பு தொடர் ஓட்டத்தில் இந்தியாவுக்கு வெண்கலம் கிடைத்துள்ளது. பஹ்ரைன் தங்க பதக்கத்தையும் இலங்கை வெள்ளி பதக்கத்தையும் வென்றுள்ளது.
- 2 Oct 2023 6:21 PM IST
ஆசிய விளையாட்டு நீளம் தாண்டுதல் மகளிர் பிரிவு ஆட்டத்தில் இந்தியாவுக்கு வெள்ளி பதக்கம் கிடைத்துள்ளது.
- 2 Oct 2023 5:28 PM IST
தடகள போட்டியில் இந்தியாவுக்கு இரண்டு பதக்கங்கள்
3 ஆயிரம் மீட்டர் ஸ்டீபிள்சேஸ் போட்டியில் இந்தியா 2 பதக்கங்களை வென்றுள்ளது. இந்தியாவின் பரூல் சவுத்ரி வெள்ளியும், ப்ரீத்தி லம்பா வெண்கலப் பதக்கமும் வென்றனர். பரூல் சவுத்ரி 9:27.63 நிமிடங்களில் இலக்கை எட்டி வெள்ளி பதக்கம் வென்றார். இதே போட்டியில் இந்தியாவின் ப்ரீத்தி லம்பா 9:43.32 நிமிடங்களில் இலக்கை எட்டி வெண்கலம் வென்றார்.
- 2 Oct 2023 5:08 PM IST
ஆசிய விளையாட்டு போட்டித் தொடரின் மகளிர் 3,000 மீட்டர் ஸ்டீபிள்சேஸ் போட்டியில் இந்தியாவுக்கு வெள்ளி பதக்கம் கிடைத்துள்ளது
- 2 Oct 2023 4:46 PM IST
மகளிர் கூடைப்பந்து: காலிறுதி போட்டியில் இந்தியாவும் வடகொரியாவும் மோதின. இதில் இந்திய அணி 57-96 என்ற கணக்கில் வடகொரியாவிடம் தோல்வியை தழுவியது.
- 2 Oct 2023 4:44 PM IST
மகளிர் கபடி போட்டி: இந்திய அணியும் சீன தைபே அணியும் மோதிய ஆட்டத்தில் இரு அணிகளும் தலா 34 புள்ளிகள் பெற்றன. இதனால் ஆட்டம் டிராவில் முடிந்தது.
- 2 Oct 2023 3:00 PM IST
ஆசிய விளையாட்டு: ஸ்பீட் ஸ்கேட்டிங்க் போட்டியில் இந்திய அணி வெண்கல பதக்கம் வென்றுள்ளது, 3,000 மீட்டர் ஸ்பீட் ஸ்கேட்டிங் மகளிர் பிரிவு ஆட்டத்தில் இந்தியாவுக்கு வெண்கலம் கிடைத்துள்ளது.
- 2 Oct 2023 2:52 PM IST
ஹாக்கி ஆண்கள் முதல் நிலை குரூப் ஏ லீக் ஆட்டத்தில் இந்தியாவும் வங்காளதேசமும் மோதின. இப்போட்டியில் துவக்கத்தில் இருந்தே இந்திய அணி அபாரமாக விளையாடியது. கோல் மழை பொழிந்த இந்திய அணி , வங்காளதேசத்தை ஒரு கோல் கூட அடிக்க விடவில்லை. இதனால், இந்திய அணி 12-0 என்ற கோல் கணக்கில் வங்காளதேசத்தை பந்தாடி வெற்றியை ருசித்தது.