ஆசிய விளையாட்டு: ஒரே நாளில் ஹாட்ரிக் தங்கப்பதக்கம் வென்ற இந்தியா..!!


ஆசிய விளையாட்டு: ஒரே நாளில் ஹாட்ரிக் தங்கப்பதக்கம் வென்ற இந்தியா..!!
x

வில் வித்தை காம்பவுண்டு பிரிவில் இந்திய ஆண்கள் அணி தங்கம் வென்று அசத்தியது.

ஹாங்சோவ்,

19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடந்து வருகிறது. இதில் 45 நாடுகளை சேர்ந்த 12,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

இந்நிலையில் வில்வித்தை ஆண்கள் காம்பவுண்டு பிரிவு இறுதிப்போட்டியில் இந்தியாவின் பிரவீன் ஓஜஸ், அபிஷேக் வர்மா மற்றும் பிரதமேஷ் ஜவகர் ஆகியோர் அடங்கிய அணி தென்கொரியாவை 235-230 என்ற புள்ளிக்கணக்கில் தோற்கடித்து தங்கப்பதக்கம் வென்றது.

முன்னதாக ஸ்குவாஷ் கலப்பு இரட்டையர் பிரிவு இறுதிப் போட்டியில் மலேசிய அணியை வீழ்த்தி இந்தியா தங்கம் வென்றுள்ளது. இந்தியாவின் தீபிகா பல்லிக்கல்/ ஹரிந்தர் பால் சிங் ஜோடி, மலேசியாவின் அய்பா பிண்டி அஸ்மான்/ முகம்மது சியாஃபிக் பின் முகத் கமல் ஜோடியை 8-3 என்ற செட் கணக்கில் வீழ்த்தி தங்கப் பதக்கத்தை வென்றது.

அதற்கு முன் வில்வித்தையில் ஜோதி, அதிதி & பர்னீத் மூவரும் அடங்கிய மகளிர் கூட்டு அணி இறுதிப் போட்டியில் சீன தைபே அணியை 230-228 என்ற கணக்கில் வீழ்த்தி தங்கப்பதக்கத்தை கைப்பற்றி அசத்தினர்.

இதன் மூலம் இந்தியா 21 தங்கம், 31 வெள்ளி, 32 வெண்கலம் என 84 பதக்கங்களுடன் பதக்க பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது.


Next Story