ஆசிய விளையாட்டு போட்டிகள்.. லைவ் அப்டேட்ஸ்


தினத்தந்தி 19 Sep 2023 10:32 AM GMT (Updated: 26 Sep 2023 10:53 AM GMT)

படகு ஓட்டும் போட்டியில் ஆடவர் ஒற்றையர் ஸ்கல்ஸ் பிரிவில் இந்திய வீரர் பல்ராஜ் பன்வார் இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.


Live Updates

  • 20 Sep 2023 1:41 PM GMT

    சீனாவில் நடக்கும் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் தொடக்க நிகழ்ச்சியில், ஆக்கி அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் சிங், குத்துச்சண்டை வீராங்கனை லோவ்லினா ஆகிய இருவரும் தேசியக் கொடி ஏந்தி இந்திய அணியை வழிநடத்த உள்ளனர்.

  • 20 Sep 2023 1:33 PM GMT

    இந்தியாவுக்கு எதிரான வாலிபால் போட்டியில் தென்கொரியா 4 வது செட்டை 20 - 25 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதனால் போட்டி 2-2 என்ற கணக்கில் சமனானது. வெற்றியை தீர்மானிக்கும் 5-வது செட் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது.

  • 20 Sep 2023 12:57 PM GMT

    தென்கொரியாவுக்கு எதிரான வாலிபால் போட்டியில் இந்தியா 3 வது செட்டை 25 - 22 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதன் மூலம் 2-1 என முன்னிலை வகிக்கிறது.

  • 20 Sep 2023 12:34 PM GMT

    வாலிபால்: ஏ பிரிவு ஆட்டத்தில் சீனா 3-0 என்ற செட்கணக்கில் கிர்கிஸ்தானை வீழ்த்தியது. இதேபோல் பி பிரிவில் ஈரான், டி பிரிவில் பாகிஸ்தான், இ பிரிவில் கத்தார், எப் பிரிவில் பிலிப்பைன்ஸ் வெற்றி பெற்றன.

  • 20 Sep 2023 12:26 PM GMT

    இரண்டாவது செட்டை 29-27 என்ற புள்ளி கணக்கில் இந்தியா கைப்பற்றியது. மூன்றாவது செட் ஆட்டம் விறுவிறுப்பாக நடைபெறுகிறது.

  • 20 Sep 2023 11:36 AM GMT

    இந்தியாவுக்கு எதிரான வாலிபால் ஆட்டத்தில், தென் கொரியா அணி முதல் செட்டை 27-25 என கைப்பற்றியது.

  • 20 Sep 2023 11:08 AM GMT

    இந்திய அணி வீரர்கள் : வினித் குமார் (கேப்டன்), குரு பிரசாந்த் சுப்ரமணியன் வெங்கடசுப்பு, அமித், எரின் வர்கீஸ், முத்துசாமி அப்பாவு, ஷமீமுதீன் அம்மராம்பத், சகாய அந்தோணிராஜ், ரோகித் குமார், அஷ்வல் ராய், லட்சுமிபுரம் மஞ்சுநாதா, மோகன், ஹரி பிரசாத்.

  • 20 Sep 2023 11:02 AM GMT

    இந்தியா, தென் கொரியா அணிகள் மோதும் வாலிபால் போட்டி தொடங்கியது.

  • 20 Sep 2023 10:47 AM GMT

    மாடர்ன் பென்டத்லான் (ஆண்கள்)

    ஃபென்சிங் தரவரிசை சுற்றில் இந்தியாவின் மயங்க் சாபேகர் 166 புள்ளிகளுடன் 28வது இடத்தை பிடித்தார்.

  • 20 Sep 2023 10:13 AM GMT

    ஆண்கள் 4 பேர் பங்கேற்கும் போட்டி

    இந்தியாவின் ஜஸ்விந்தர் சிங், பீம் சிங், புனித் குமார் மற்றும் ஆஷிஷ் ஆகியோர் 6 நிமிடங்கள் 20.47 வினாடிகளில் இறுதி கோட்டைத் தாண்டி, இறுதிச்சுற்றுக்கு முன்னேறினர்.


Next Story