ஆசிய விளையாட்டு போட்டிகள்.. லைவ் அப்டேட்ஸ்
படகு ஓட்டும் போட்டியில் ஆடவர் ஒற்றையர் ஸ்கல்ஸ் பிரிவில் இந்திய வீரர் பல்ராஜ் பன்வார் இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.
Live Updates
- 21 Sept 2023 3:33 PM IST
ஆசிய விளையாட்டு.. தங்கப்பதக்கம் வெல்ல வாய்ப்பு உள்ள இந்தியர்கள்
ஹாங்சோவில் நடைபெறும் ஆசிய விளையாட்டு போட்டியில் 655 வீரர், வீராங்கனைகளை இந்தியா களமிறக்கி உள்ளது. இதில் தங்கம் வெல்வதற்கு வாய்ப்பு உள்ள டாப்-10 இந்தியர்களை ESPN இந்தியா தேர்வு செய்துள்ளது.
1.நீரஜ் சோப்ரா -ஈட்டி எறிதல்
2. நிகத் ஜரீன் - குத்துச்சண்டை
3. ஆடவர் ஆக்கி அணி
4. இந்திய செஸ் அணி
5. ஆடவர் கபடி அணி
6. சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி, சிராக் ஷெட்டி - பேட்மிண்டன்
7. முரளி ஸ்ரீசங்கர் - நீளம் தாண்டுதல்
8. 4x400மீ தொடர் ஓட்ட அணி
9. வில்வித்தை காம்பவுண்ட் அணி
10.ருத்ராங்ஷ் பாட்டீல்- துப்பாக்கி சுடுதல்
- 21 Sept 2023 2:49 PM IST
இந்தியா-வங்காளதேசம் அணிகளுக்கிடையிலான கால்பந்து லீக் ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை.
- 21 Sept 2023 1:57 PM IST
கால்பந்து: இந்தியா-வங்காளதேசம் அணிகள் மோதும் லீக் ஆட்டம் விறுவிறுப்பாக நடைபெறுகிறது.
- 21 Sept 2023 11:49 AM IST
படகோட்டுதல் போட்டி: தங்கப் பதக்க போட்டியில் இந்திய வீரர்கள்
இந்திய வீரர்கள் இன்று ஆடவர் லைட் வெயிட் டபுள் ஸ்கல்ஸ் மற்றும் ஆடவர் டபுள்ஸ் ஸ்கல்ஸ் இறுதிச் சுற்றுக்கு முன்னேறினர். இனி 24ம் தேதி தங்கப் பதக்கத்திற்கான போட்டியில் பங்கேற்கிறார்கள்.
- 21 Sept 2023 10:49 AM IST
கால்பந்து போட்டி: ஏ பிரிவில் உள்ள இந்திய ஆண்கள் அணி, தனது முதல் லீக் ஆட்டத்தில் சீனாவிடம் 1-5 என தோல்வியடைந்தது. இன்று பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்க உள்ள இரண்டாவது லீக் ஆட்டத்தில் வங்காளதேசத்தை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டம் இந்திய அணிக்கு வாழ்வா, சாவா? ஆட்டம் ஆகும். இதில் வெற்றி பெற்றால் மட்டுமே அடுத்த சுற்றுக்கு முன்னேறும்.
இந்திய பெண்கள் கால்பந்து அணி, இன்று லீக் சுற்றில் சீன தைபே அணியுடன் விளையாட உள்ளது. இந்த ஆட்டம் மாலை 5 மணிக்கு தொடங்க உள்ளது.
- 21 Sept 2023 10:37 AM IST
பெண்கள் கிரிக்கெட்: இன்று பிற்பகல் நடைபெற உள்ள இரண்டாவது காலிறுதி ஆட்டத்தில் பாகிஸ்தான்- இந்தோனேசியா அணிகள் மோதுகின்றன. நாளை நடைபெறும் காலிறுதி ஆட்டங்களில் இலங்கை-தாய்லாந்து, வங்காளதேசம்-ஹாங்காங் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் வெற்றி பெறும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். 24 ஆம் தேதி நடைபெற உள்ள அரையிறுதியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் வாய்ப்புள்ளது.
- 21 Sept 2023 10:33 AM IST
174 ரன்கள் என்ற இலக்கை நோக்கி மலேசியா அணி களமிறங்கியது. 2 பந்துகள் மட்டுமே வீசப்பட்ட நிலையில், மழை பெய்ததால் ஆட்டம் கைவிடப்பட்டது. எனினும், உயர் தரநிலை அடிப்படையில் இந்திய அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதன்மூலம் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியது.
- 21 Sept 2023 9:39 AM IST
ஆசிய விளையாட்டு பெண்கள் கிரிக்கெட் போட்டியில் மலேசிய அணி வெற்றி பெற 174 ரன்களை இந்தியா இலக்காக நிர்ணயித்து உள்ளது.
- 21 Sept 2023 9:36 AM IST
ஆசிய விளையாட்டு பெண்கள் கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெறும் முதல் காலிறுதியில் இந்தியா-மலேசியா அணிகள் மோதுகின்றன.
- 20 Sept 2023 7:26 PM IST
ஆண்கள் வாலிபால் போட்டியில் 5-வது செட்டில் மூன்று முறை தங்கப் பதக்கம் வென்ற தென்கொரியாவை வீழ்த்தி, இந்தியா இரண்டு வெற்றிகளுடன் தனது பிரிவில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.