ஆசிய சாம்பியன்ஷிப் வாள்வீச்சு : தமிழ்நாடு வீராங்கனை பவானி தேவிக்கு வெண்கலம்...!


ஆசிய சாம்பியன்ஷிப் வாள்வீச்சு : தமிழ்நாடு வீராங்கனை பவானி தேவிக்கு வெண்கலம்...!
x

ஆசிய சாம்பியன்ஷிப் வாள்வீச்சு போட்டியில், தமிழ்நாடு வீராங்கனை பவானி தேவி வெண்கலம் வென்றார்.

பீஜிங்,

ஆசிய சாம்பியன்ஷிப் வாள்வீச்சு போட்டி சீனாவில் 17ம் தேதி முதல் 22ம் தேதி வரை நடைபெறுகிறது. பின், 22ம் தேதி முதல் 30ம் தேதி வரை இத்தாலியில் நடைபெறுகிறது. . இதில் இந்தியாவிற்காக தமிழ்நாடு வீராங்கனை பவானி தேவி பங்கேற்றார். சிறப்பாக விளையாடி காலிறுதியில் உலக சாம்பியனான மிஸாகி யமுராவை வீழ்த்தினார்.

அதன்பிறகு அரையிறுதியில் உஸ்பெகிஸ்தான் வீராங்கனையிடம் 14-15 என்ற புள்ளி கணக்கில் பவானி தோல்வியடைந்தார். பின்னர் மூன்றாம் நிலை வீராங்கனை ஓசாகி செரியை 15-11 என்ற கணக்கில் வீழ்த்தி வெண்கலம் பதக்கம் வென்றார்.

வெண்கலம் பதக்கம் வென்றதன் மூலம் ஆசிய அளவில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை படைத்துள்ளார். பவானியின் இந்த வரலாற்று சாதனைக்கு இந்திய வாள்வீச்சு சங்கத்தின் பொதுச்செயலாளர் ராஜீவ் மேத்தா வாழ்த்து தெரிவித்தார்.


Next Story