காமன்வெல்த் பளுதூக்குதலில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனைக்கு பாராட்டு விழா

கோப்புப்படம்
காமன்வெல்த் பளுதூக்குதலில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனைக்கு அவரது பள்ளியில் நேற்று பாராட்டு விழா நடந்தது.
சென்னை,
சமீபத்தில் நொய்டாவில் நடந்த காமன்வெல்த் பளுதூக்குதல் போட்டியில் இளையோருக்கான 81 கிலோ எடைப்பிரிவில் கலந்து கொண்ட தமிழக வீராங்கனை ஆர்.பி.கீர்த்தனா மொத்தம் 177 கிலோ எடை தூக்கி தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார்.
தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்த இவர் திருவள்ளூரை அடுத்த செவ்வாய்பேட்டையில் உள்ள சித்தார்த்தா வேலம்மாள் வித்யாஸ்ரமம் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். அவருக்கு அந்த பள்ளியில் நேற்று பாராட்டு விழா நடந்தது. விழாவில், அவருக்கு நிதி உதவி வழங்கியதுடன் அவரது படிப்பு செலவு முழுவதையும் தான் ஏற்றுக்கொள்வதாக பள்ளி தாளாளர் எஸ்.சுடலைமுத்து பாண்டி தெரிவித்தார்.
Related Tags :
Next Story






