72 வயது சிங்கப்பெண்... தடகளத்தில் வெள்ளி பதக்கம் தட்டி சென்றார்


72 வயது சிங்கப்பெண்... தடகளத்தில் வெள்ளி பதக்கம் தட்டி சென்றார்
x

80 மீட்டர் தடகள பந்தயத்தில், இலக்கை 44.32 வினாடிகளில் எட்டி, 2-வது இடம் பிடித்து வெள்ளி பதக்கம் தட்டி சென்றார்.

கொச்சி,

பிலிப்பைன்ஸ் நாட்டில் நியூ கிளார்க் சிட்டி தடகள மைதானத்தில் 22-வது ஆசிய மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்தன. இதில், கேரளாவின் திருவனந்தபுரம் நகரை சேர்ந்த இந்திரா தேவி (வயது 72) கலந்து கொண்டு அசத்தினார்.

இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் நாடுகளை சேர்ந்த பலரும் போட்டியில் பங்கேற்றனர். எனினும், அவர் போட்டியில் 2-வது இடம் பிடித்து வெள்ளி பதக்கம் தட்டி சென்றார்.

80 மீட்டர் தடகள பந்தயத்தில், இலக்கை 44.32 வினாடிகளில் எட்டியுள்ளார். இதுபற்றி அவர் கூறும்போது, குடும்பம் மற்றும் பிற பொறுப்புகளை முன்னிட்டு விளையாட்டுக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுக்காமல் இருந்து வந்தேன்.

ஆனால், இப்போது சாதனை படைக்கும் தருணம் வந்துள்ளது என கூறியுள்ளார். ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்ற பின்னர், 65-வது வயதில் தனது கனவுகளுக்கு வடிவம் கொடுக்க முன்வந்த அவர், சர்வதேச போட்டிகளில் பங்கேற்க தொடங்கினார். 2019-ம் ஆண்டு நடந்த போட்டியில், 5-வது இடம் பெற்றார்.

இந்நிலையில், வெள்ளி பதக்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார். அடுத்து உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெறும் ஆர்வத்தில் உள்ளார்.


Next Story