ஆசிய 5 பேர் ஆக்கி போட்டிக்கான இந்திய அணிகள் அறிவிப்பு


ஆசிய 5 பேர் ஆக்கி போட்டிக்கான இந்திய அணிகள் அறிவிப்பு
x

தகுதி சுற்று போட்டிக்கான இந்திய 5 பேர் ஆக்கி அணிகள் நேற்று அறிவிக்கப்பட்டது.

புதுடெல்லி,

ஒரு அணியில் 5 பேர் களம் காணும் முதலாவது உலகக் கோப்பை ஆக்கி போட்டி ஓமன் தலைநகர் மஸ்கட்டில் அடுத்த ஆண்டு (2024) ஜனவரி மாதம் நடக்கிறது. இந்த தொடருக்கு போட்டியை நடத்தும் ஓமன் அணி நேரடியாக தகுதி பெறும். மற்றும் 5 மண்டலங்களில் நடைபெறும் தகுதி சுற்று போட்டிகளில் முதல் 3 இடங்களை பிடிக்கும் அணிகள் தகுதி பெறும்.

உலகக் கோப்பைக்கான ஆசிய மண்டல தகுதி சுற்று போட்டி ஓமன் நாட்டின் சலாலா நகரில் நடக்கிறது. இதில் பெண்கள் பிரிவு போட்டி வருகிற 25-ந் தேதி முதல் 28-ந் தேதி வரையும், ஆண்கள் பிரிவு போட்டி வருகிற 29-ந் தேதி முதல் செப்டம்பர் 2-ந் தேதிவரையும் நடக்கிறது. ஆசிய தகுதி சுற்று போட்டிக்கான இந்திய 5 பேர் ஆக்கி அணிகள் நேற்று அறிவிக்கப்பட்டது. ஆண்கள் அணியின் கேப்டனாக மன்தீப் மோரும், பெண்கள் அணியின் கேப்டனாக நவ்ஜோத் கவுரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்திய 5 பேர் ஆக்கி அணிகள் வருமாறு:-

ஆண்கள் அணி: சுரஜ் கார்கெரா (கோல்கீப்பர்), ஜூக்ராஜ் சிங், திப்சன் திர்கே, மன்தீப் மோர் (கேப்டன்), மன்ஜீத் (பின்களம்), முகமது ரஹீல் மவுதீன் (துணை கேப்டன்), மனிந்தர் சிங் (நடுகளம்), பவன் ராஜ்பார், குர்ஜோத் சிங் (முன்களம்), மாற்று வீரர்கள்: பிரசாந்த் குமார் சவுகான், சுக்விந்தர், ஆதித்யா சிங், அருண் சஹானி.

பெண்கள் அணி: பன்சாரி சோலங்கி (கோல்கீப்பர்), அக்ஷதா அபாசோ தேகலே, மஹிமா சவுத்ரி, சோனியா தேவி ஷெட்ரிமாயூம் (பின்களம்), நவ்ஜோத் கவுர் (கேப்டன்), அஜ்மினா குஜூர் (நடுகளம்), மரியனா குஜூர், ஜோதி (துணை கேப்டன்), திபி மோனிகா டாப்போ (முன்களம்), மாற்று வீராங்கனைகள்: குர்மாபு ரம்யா, நிஷி யாதவ், பிரியங்கா யாதவ், ரிதான்யா சாஹூ.


Next Story