எப்.ஐ.எச்.புரோ லீக் ஆக்கி: நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா திரில் வெற்றி


எப்.ஐ.எச்.புரோ லீக் ஆக்கி: நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா திரில் வெற்றி
x

Image Tweeted By TheHockeyIndia

இந்திய அணி 4-3 என்ற கோல் கணக்கில் நியூசிலாந்தை வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது.

புவனேஸ்வர்,

எப்.ஐ.எச். புரோ லீக் ஆக்கி 2022-2023ன் சீசன் ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் நகரில் இன்று தொடங்கியது. இதில் ஹர்மன்பிரீத் சிங் தலைமையிலான இந்திய ஆண்கள் ஆக்கி அணி நியூசிலாந்தை எதிர்கொண்டது. இந்த போட்டியில் தொடக்கத்தில் ஆதிக்கம் செலுத்திய நியூசிலாந்து வீரர்கள் அடுத்தடுத்து கோல்கள் அடித்து அசத்தினர்.

இதனால் ஒரு கட்டத்தில் இந்திய அணி 1-3 என்ற கோல் கணக்கில் பின்தங்கி இருந்தது. பின்னர் ஹர்மன்பிரீத் ஒரு கோல் அடித்தார். பின்னர் கடைசி 15 நிமிடங்களில் மந்தீப் சிங் 2 கோல்கள் அடித்து அசத்தினார். இதனால் இந்திய அணி 4-3 என்ற கோல் கணக்கில் திரில் வெற்றி பெற்றது. இந்திய அணி தனது அடுத்த போட்டியில் அக்டோபர் 30 ஆம் தேதி ஸ்பெயின் அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.


Next Story