ஆசிய கோப்பை ஹாக்கி : சாம்பியன் பட்டம் வென்ற இந்திய பெண்கள் அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து
சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
8-வது பெண்கள் ஜூனியர் ஆசிய கோப்பை ஆக்கி போட்டி ஜப்பானின் கமாமிகஹராவில் நடந்தது. இதில் இன்று நடந்த இறுதிப்போட்டியில் இந்தியா - தென்கொரியா அணிகள் மோதின.
பரபரப்பான இந்த ஆட்டத்தில் இந்திய அணி தொடக்கம் முதல் செலுத்தியது . இதனால் ஆட்ட நேர முடிவில் 2-1 என்ற கோல் கணக்கில் தென் கொரியாவை வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது. ஆசியக் கோப்பை ஜூனியர் பெண்கள் ஹாக்கி தொடரில் முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்று இந்தியா சாதனை படைத்துள்ளது.
இந்த நிலையில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது'குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் ,
2023 மகளிர் ஹாக்கி ஜூனியர் ஆசிய கோப்பையை வென்ற எங்கள் இளம் சாம்பியன்களுக்கு வாழ்த்துகள்! அணி அபாரமான விடாமுயற்சி, திறமை மற்றும் குழுப்பணியை வெளிப்படுத்தியுள்ளது. அவர்கள் நம் தேசத்தை மிகவும் பெருமைப்படுத்தியுள்ளனர். தங்களின் முன்னோக்கிய முயற்சிகளுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.