கால்பந்து வரலாற்றில் அதிக கோல்கள் : முதல் 5 இடங்களுக்குள் நுழைந்து சுனில் சேத்ரி சாதனை


கால்பந்து வரலாற்றில் அதிக கோல்கள் : முதல் 5 இடங்களுக்குள் நுழைந்து சுனில் சேத்ரி சாதனை
x

Image Courtesy : AFP 

இந்த பட்டியலில் போர்ச்சுகல் வீரர் ரொனால்டோ முதல் இடத்தில் உள்ளார்.

கொல்கத்தா,

அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் 18-வது ஆசிய கோப்பை கால்பந்து போட்டிக்கு இந்திய அணி நேற்று தகுதி பெற்றது. ஹாங்காங் அணியுடன் நேற்று நடைபெற்ற தகுதிசுற்று போட்டியில் இந்திய அணி 4-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் இந்திய அணியின் கேப்டன் சுனில் சேத்ரி அணியின் 2-வது கோலை அடித்தார். இதன்மூலம் சர்வதேச கால்பந்து அரங்கில் அதிக கோல்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் சுனில் சேத்ரி 5-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

சுனில் சேத்ரி தனது 84 சர்வதேச கோலை நேற்று அடித்தார். இதன் மூலம் ஹங்கேரி வீரர் ஃபெரன்க் புஸ்காஸ் உடன் 5-வது இடத்தை அவர் பகிர்ந்து கொண்டுள்ளார். இந்த பட்டியலில் போர்ச்சுகல் அணியின் கால்பந்து நட்சத்திரம் ரொனால்டோ 117 சர்வதேச கோல்கள் உடன் முதல் இடத்தில் உள்ளார். 2-வது இடத்தில் ஈரான் அணியின் அலி டேய் உள்ளார். 3-வது இடத்தில் மொக்தார் தஹாரி (மலேஷியா) உள்ளார். 4-வது இடத்தில் அர்ஜென்டினா அணியின் மெஸ்ஸி (86 கோல்கள்) உள்ளார்.


Next Story