உஸ்பெகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டம் சவாலாக இருக்கும் - சுனில் சேத்ரி
இந்திய அணி தனது 2வது ஆட்டத்தில் வரும் 18-ம் தேதி உஸ்பெகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது .
கத்தார்,
ஆசிய கோப்பை கால்பந்தாட்ட தொடர் கத்தார் நாட்டில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற குரூப் சுற்று ஆட்டத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 2-0 என வெற்றி பெற்றது.
இந்த நிலையில் இந்த போட்டியின் தோல்விக்கு பிறகு பேசிய இந்திய அணியின் கேப்டன் சுனில் சேத்ரி ,
ஆசியாவின் சிறந்த அணிக்கு எதிராக விளையாடுவது எளிதல்ல, ஆஸ்திரலிய அணிக்கு எதிராக நாங்கள் அதிகம் விளையாடுவதில்லை, எனவே என்ன எதிர்பார்க்க வேண்டும் என்று தெரியாது.
"இது இப்போது கலவையானஉணர்வுகளை தருகிறது. போட்டியின் வீடியோக்களைப் பார்க்கும்போது , நாம் அதிக நம்பிக்கையைப் பெறுவோம், மேலும் சிறப்பாகச் செய்திருக்கக்கூடிய விஷயங்களில் கவனத்துடன் செயல்படுவோம் . உஸ்பெகிஸ்தான், ஆஸ்திரேலியா போன்ற அணி அல்ல , இருப்பினும் அவர்கள் ஒரு நல்ல அணி. எனவே அந்த ஆட்டமும் பெரிய சவாலாக இருக்கும்.என தெரிவித்தார்.
இந்திய அணி தனது 2வது ஆட்டத்தில் வரும் 18-ம் தேதி உஸ்பெகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது .