ஐ.எஸ்.எல். கால்பந்து: ஐதராபாத் அணி 2-வது வெற்றி


ஐ.எஸ்.எல். கால்பந்து: ஐதராபாத் அணி 2-வது வெற்றி
x
தினத்தந்தி 23 Oct 2022 1:22 AM IST (Updated: 23 Oct 2022 2:31 AM IST)
t-max-icont-min-icon

ஐ.எஸ்.எல். கால்பந்து லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஐதராபாத் அணி, பெங்களூருவை வீழ்த்தி 2-வது வெற்றியை ருசித்தது.

ஐதராபாத்,

11 அணிகள் இடையிலான 9-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

இதில் மும்பையில் நேற்று மாலை நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் மும்பை சிட்டி-ஜாம்ஷெட்பூர் அணிகள் மோதின. இந்த ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. மும்பை சிட்டி அணியில் சான்டே 8-வது நிமிடத்திலும், ஜாம்ஷெட்பூர் அணியில் சக்வு 12-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர்.

ஐதராபாத்தில் நேற்று இரவு நடந்த மற்றொரு லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஐதராபாத் அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னாள் சாம்பியனான பெங்களூருவை வீழ்த்தி 2-வது வெற்றியை ருசித்தது.

புவனேஷ்வரில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் லீக் ஆட்டத்தில் ஒடிசா-கேரளா பிளாஸ்டர்ஸ் அணிகள் சந்திக்கின்றன.

1 More update

Next Story