கால்பந்து: ஜாம்பவான் பீலேவின் சாதனையை தகர்த்த 16 வயது ஸ்பெயின் வீரர்


கால்பந்து: ஜாம்பவான் பீலேவின் சாதனையை தகர்த்த 16 வயது ஸ்பெயின் வீரர்
x

ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப்பின் அரையிறுதியில் ஸ்பெயின் அணி 2-1 என்ற கோல் கணக்கில் பிரான்சை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

முனிச்,

17-வது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் (யூரோ) போட்டி ஜெர்மனியில் நடந்து வருகிறது. இதில் நேற்று முன்தினம் இரவு நடந்த முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான ஸ்பெயின்-பிரான்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

தொடக்கம் முதலே அனல்பறந்த இந்த ஆட்டத்தில் ஸ்பெயின் அணி 2-1 என்ற கோல் கணக்கில் பிரான்சை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. ஸ்பெயின் தரப்பில் லாமின் யாமல் மற்றும் டேனி ஓல்மோ தலா 1 கோல் அடித்தனர்.

லாமின் யாமல் சாதனை:

இந்த ஆட்டத்தில் கோலடித்த ஸ்பெயின் வீரர் லாமின் யாமலுக்கு 16 வயது 362 நாட்கள்தான் ஆகிறது. இதன் மூலம் உலகக் கோப்பை மற்றும் யூரோ சாம்பியன்ஷிப் வரலாற்றில் குறைந்த வயதில் கோல் அடித்த வீரர் என்ற சாதனையை தன்வசப்படுத்தினார். இதற்கு முன்பு 1958-ம் ஆண்டு உலகக் கோப்பையில் வேல்சுக்கு எதிரான ஆட்டத்தில் பிரேசில் ஜாம்பவான் பீலே 17 வயது 239 நாட்களில் கோல் அடித்ததே சாதனையாக இருந்தது. தற்போது அதனை தகர்த்துள்ள லாமின் புதிய சாதனை படைத்துள்ளார்.


Next Story