ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப்: நெதர்லாந்து, இங்கிலாந்து அணிகள் வெற்றி


ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப்: நெதர்லாந்து, இங்கிலாந்து அணிகள் வெற்றி
x

Image Courtesy: AFP

17-வது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் (யூரோ) போட்டி ஜெர்மனியில் நடந்து வருகிறது.

டாட்மன்ட்,

17-வது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் (யூரோ) போட்டி ஜெர்மனியில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 24 அணிகள் 6 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும், தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.

லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள், 3-வது இடத்தை பெறும் சிறந்த 4 அணிகள் என்று மொத்தம் 16 அணிகள் 'நாக்-அவுட' சுற்றுக்கு தகுதி பெறும். இந்நிலையில் இந்த தொடரில் நேற்று மாலை 6.30 மணிக்கு நடைபெற்ற ஒரு லீக் ஆட்டத்தில் போலந்து - நெதர்லாந்து அணிகள் மோதின.

இந்த ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் தலா 1 கோல் அடித்தன. இதனால் முதல் பாதி ஆட்டம் 1-1 என சமனில் முடிந்தது. தொடர்ந்து நடைபெற்ற 2வது பாதி ஆட்டத்தில் 83வது நிமிடத்தில் நெதர்லாந்து அணி மேலும் ஒரு கோல் அடித்து அசத்தியது. இறுதியில் இந்த ஆட்டத்தை 2-1 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்து கைப்பற்றியது.

இதையடுத்து இரவு 9.30 மணிக்கு நடைபெற்ற மற்றொரு லீக் ஆட்டத்தில் டென்மார்க் - சுலோவீனியா அணிகள் மோதின. இந்த ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. இதையடுத்து நள்ளிரவு 12.30 மணிக்கு நடைபெற்ற மற்றொரு லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து - செர்பியா அணிகள் மோதின.

இந்த ஆட்டத்தின் முதல் பாதியில் இங்கிலாந்து அணி 1 கோல் அடித்து 1-0 என முன்னிலை பெற்றது. தொடர்ந்து நடைபெற்ற 2வது பாதி ஆட்டத்தில் இரு அணி வீரர்களும் கோல் அடிக்க எடுத்த முயற்சிகளுக்கு பலன் கிடைக்கவில்லை. இறுதியில் இந்த ஆட்டத்தில் 1-0 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து வெற்றி பெற்றது.


Next Story