ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப்: நெதர்லாந்து அரையிறுதிக்கு முன்னேற்றம்


ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப்: நெதர்லாந்து அரையிறுதிக்கு முன்னேற்றம்
x

Image :UEFA EURO 2024

கால்இறுதி ஆட்டம் ஒன்றில் நெதர்லாந்து - துருக்கி அணிகள் மோதின.

முனிச்,

17-வது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி ஜெர்மனியில் நடந்து வருகிறது.இந்த நிலையில் இந்த தொடரில் நேற்று நடைபெற்ற கால்இறுதி ஆட்டம் ஒன்றில் நெதர்லாந்து - துருக்கி அணிகள் மோதின.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதல் இரு அணிகளும் ஆதிக்கம் செலுத்தின. ஆட்டத்தின் 35வது நிமிடத்தில் துருக்கி அணி கோல் அடித்தது. இதனால் அந்த அணி 1-0 என முன்னிலை பெற்றது.தொடர்ந்து ஆட்டத்தின் 70வது நிமிடத்திலும் , 76வது நிமிடத்திலும் கோல் அடித்த நெதர்லாந்து 2-1 என முன்னிலை பெற்றது. தொடர்ந்து துருக்கி அணி பதில் கோல் அடிக்கவில்லை.இதனால் ஆட்ட நேர முடிவில் 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று நெதர்லாந்து அரையிறுதிக்கு தகுதி பெற்றது


Next Story