ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப்: பிரான்ஸ் அரையிறுதிக்கு முன்னேற்றம்


ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப்: பிரான்ஸ் அரையிறுதிக்கு முன்னேற்றம்
x

Image :UEFA EURO 2024

கால்இறுதி ஆட்டம் ஒன்றில் போர்ச்சுகல் - பிரான்ஸ் அணிகள் மோதின.

முனிச்,

17-வது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி ஜெர்மனியில் நடந்து வருகிறது. இதில் நாக்-அவுட் சுற்று (ரவுண்ட் ஆப் 16) முடிவில் பிரான்ஸ், போர்ச்சுகல், நெதர்லாந்து, ஸ்பெயின், ஜெர்மனி, இங்கிலாந்து, சுவிட்சர்லாந்து, துருக்கி ஆகிய 8 அணிகள் கால்இறுதிக்கு தகுதி பெற்றன. இந்த நிலையில் இந்த தொடரில் நள்ளிரவு நடைபெற்ற கால்இறுதி ஆட்டம் ஒன்றில் போர்ச்சுகல் - பிரான்ஸ் அணிகள் மோதின.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதல் இரு அணிகளும் ஆதிக்கம் செலுத்தின. இருப்பினும் இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் எந்த கோலும் அடிக்கவில்லை. இதனால் ஆட்டம் 0-0 என்று டிரா ஆனது. ஆட்டம் டிரா ஆனதால் பெனால்டி ஷூட் அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் 5-3 என்ற கணக்கில் பிரான்ஸ் வெற்றி பெற்றது. இதனால் பிரான்ஸ் அணி அரையிறுதிக்கு முன்னேறியது .


Next Story