'தங்க ஷூவை வெல்வது நோக்கமல்ல'- எம்பாப்பே


தங்க ஷூவை வெல்வது நோக்கமல்ல- எம்பாப்பே
x

 Image Courtesy: AFP

தினத்தந்தி 6 Dec 2022 1:40 AM IST (Updated: 6 Dec 2022 3:03 AM IST)
t-max-icont-min-icon

கிலியன் எம்பாப்பே அதிக கோல் அடித்தவர்களுக்கு வழங்கப்படும் தங்க ஷூ விருதுக்கான வாய்ப்பில் முதலிடத்தில் இருக்கிறார்.

தோகா,

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் நேற்று முன்தினம் நடந்த 2-வது சுற்றில் நடப்பு சாம்பியன் பிரான்ஸ் அணி 3-1 என்ற கோல் கணக்கில் போலந்தை ஊதித்தள்ளியது. இந்த ஆட்டத்தில் பிரான்ஸ் நட்சத்திர வீரர் கிலியன் எம்பாப்பே 2 கோல்கள் அடித்தார்.

இந்த உலகக் கோப்பையில் இதுவரை 5 கோல்கள் அடித்துள்ள எம்பாப்பே அதிக கோல் அடித்தவர்களுக்கு வழங்கப்படும் தங்க ஷூ விருதுக்கான வாய்ப்பில் முதலிடத்தில் இருக்கிறார். அடுத்த இடத்தில் உள்ளவர்கள் 3 கோல்கள் அடித்து இருக்கிறார்கள்.

இது பற்றி 23 வயதான எம்பாப்பே நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், 'எனது ஒரே குறிக்கோள் உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்பது தான். இதன்படி இப்போது கால்இறுதியில் வெற்றி பெற்றாக வேண்டும். அது தான் எனது கனவு. தங்க ஷூ வெல்வதற்காக இங்கு வரவில்லை. அணியின் வெற்றிக்கு உதவ வேண்டும். அது தான் முக்கியம். எனது சிந்தனை முழுவதையும் உலகக் கோப்பை போட்டியே ஆட்கொண்டுள்ளது. இந்த போட்டிக்காக கடுமையான பயிற்சியின் மூலம் என்னை உடல் அளவிலும், மனதளவிலும் வலுவாக தயார்படுத்தி கொண்டேன். இதுவரை எல்லாமே நன்றாக அமைந்துள்ளது. எங்களது இலக்கை அடைய இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டி உள்ளது' என்றார்.


Next Story