உலகக்கோப்பையில் இடம் பெற்ற சாஹல் மனைவி - ரசிகர்கள் மகிழ்ச்சி...!


உலகக்கோப்பையில் இடம் பெற்ற சாஹல் மனைவி - ரசிகர்கள் மகிழ்ச்சி...!
x
தினத்தந்தி 20 Sept 2023 4:56 AM (Updated: 20 Sept 2023 5:12 AM)
t-max-icont-min-icon

இந்தியாவில் நடைபெற உள்ள உலகக் கோப்பை தொடரை பிரபலப்படுத்தும் விதமாக பாடல் ஒன்றை இன்று ஐசிசி வெளியிடவுள்ளது.

மும்பை,

இந்தியாவில் வரும் அக்டோபர் 5ம் தேதி 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொள்ள உள்ளன. தொடரின் தொடக்க ஆட்டத்தில் இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் மோத உள்ளன.

இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை சென்னையில் சந்திக்கிறது. இந்நிலையில் இந்த தொடருக்கான இந்திய அணியில் சாஹலை எடுக்காதது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. சாஹல் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டாலும் பேட்டிங் ஆட தெரிந்த சுழற்பந்து வீச்சாளர் தேவை என்பதால் சாஹல் அணியிலிருந்து கழட்டி விடப்பட்டுள்ளார்.

இந்நிலையில் உலகக்கோப்பையில் கலந்து கொள்ள சாஹலுக்கு கிடைக்காத வாய்ப்பு அவரது மனைவி தனஸ்ரீ வர்மாக்கு கிடைத்துள்ளது. அதாவது இந்தியாவில் நடைபெற உள்ள உலகக் கோப்பை தொடரை பிரபலப்படுத்தும் விதமாக பாடல் ஒன்றை இன்று ஐசிசி வெளியிடவுள்ளது.

இந்த பாடலில் பாலிவுட் நடிகர் ரண்வீர் சிங் நடித்துள்ளார். இந்த பாடலுக்கு 'தில் ஜாஷ்ன் போலே' என்று பெயரிடப்பட்டுள்ளது, இந்த பாடலை பிரபல இசையமைப்பாளர் ப்ரீதம் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் சிறந்த நடனக்கலைஞரான தனஸ்ரீ வர்மா உலகக்கோப்பை தொடருக்காக ஐசிசி வெளியிடும் பாடலில் ரன்வீர் சிங்குடன் நடனம் ஆடி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தனஸ்ரீ வர்மா பிரபல யூடியூபர் ஆவார். சிறந்த நடன கலைஞரான அவர் நடனம் கற்றுக் கொடுத்தும் வருகிறார். தனது யூடியூப் சேனலில் நடனம் ஆடி அதை வீடியோவாக பகிர்ந்து வருகிறார்.

சாஹலை திருமணம் செய்யும் முன்பு இருந்தே அவர் வட இந்திய அளவில் யூடியூபில் பிரபலமானவராக இருந்தார். சுமார் 55 லட்சம் பேர் அவரை இன்ஸ்டாகிராமில் பின் தொடர்ந்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story