உலக கோப்பை தகுதி சுற்று இறுதிப் போட்டி; இலங்கை 233 ரன்கள் சேர்ப்பு...!


உலக கோப்பை தகுதி சுற்று இறுதிப் போட்டி; இலங்கை 233 ரன்கள் சேர்ப்பு...!
x

Image Courtesy: @ICC

உலக கோப்பை தகுதி சுற்று இறுதிப் போட்டியில் இலங்கை-நெதர்லாந்து அணிகள் ஆடி வருகின்றன.

ஹராரே,

13-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் அக்டோபர் 5-ந் தேதி முதல் நவம்பர் 19-ந் தேதி வரை நடக்கிறது. இதில் 10 நாடுகள் பங்கேற்கின்றன. 8 நாடுகள் நேரடியாக தகுதி பெற்றன. 2 அணிகளை தேர்வு செய்வதற்கான தகுதி சுற்று ஆட்டங்கள் ஜிம்பாப்வேயில் நடைபெற்று வருகிறது.

இலங்கை, நெதர்லாந்து அணிகள் முதல் 2 இடங்களை பிடித்து உலக கோப்பை போட்டிக்கு தகுதி பெற்றன. 2 முறை உலக கோப்பையை வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதல் முறையாக தகுதி பெறவில்லை. இதேபோல் ஜிம்பாப்வே அணியும் தகுதி பெறவில்லை.

இந்த நிலையில் உலகக்கோப்பை தொடரின் தகுதிச்சுற்று தொடரின் இறுதி ஆட்டத்தில் இலங்கை-நெதர்லாந்து அணிகள் இன்று ஆடி வருகின்றன. இந்த ஆட்டத்துக்கான டாசில் வென்ற நெதர்லாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.

இதையடுத்து இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய பதும் நிசாங்கா 23 ரன்னும், சதீரா சமரவிக்ரமா 19 ரன்னும் எடுத்தனர். இதையடுத்து களம் இறங்கிய குசல் மெண்டிஸ் 43 ரன், சஹான் ஆராச்சிகே 57 ரன்னும் எடுத்து அணியை சரிவில் இருந்து மீட்டனர்.

இதையடுத்து களம் இறங்கிய அசலங்கா 36 ரன், டி சில்வா 4 ரன், ஷனாகா 1 ரன் எடுத்து அடுத்தடுத்து அவுட் ஆகினர். இறுதியில் இலங்கை அணி 47.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 233 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.

இலங்கை அணி தரப்பில் ஹான் ஆராச்சிகே 57 ரன்கள் எடுத்தார். இதையடுத்து 234 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நெதர்லாந்து அணி ஆட உள்ளது.


Next Story