மகளிர் டி20 உலகக்கோப்பை: இங்கிலாந்துக்கு எதிராக டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பேட்டிங் தேர்வு


மகளிர் டி20 உலகக்கோப்பை: இங்கிலாந்துக்கு எதிராக டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பேட்டிங் தேர்வு
x

image courtesy: @T20WorldCup

மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்துக்கு எதிராக டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

துபாய்,

9-வது மகளிர் டி20 உலகக் கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் சார்ஜாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் கலந்து கொண்டுள்ள 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.

அதன்படி ஏ பிரிவில் இந்தியா, நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இலங்கை, பாகிஸ்தான் அணிகளும், 'பி' பிரிவில் இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், வங்காளதேசம், ஸ்காட்லாந்து அணிகளும் இடம் பெற்றுள்ளன.

இந்நிலையில், இந்த தொடரில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோத உள்ளன. இதையடுத்து இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளது.


Next Story