பெண்கள் டி20 உலகக்கோப்பை: நியூசிலாந்து - இலங்கை அணிகள் இன்று மோதல்


பெண்கள் டி20 உலகக்கோப்பை: நியூசிலாந்து - இலங்கை அணிகள் இன்று மோதல்
x

இன்று மாலை நடைபெற உள்ள லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து - இலங்கை அணிகள் மோதுகின்றன

துபாய்,

9-வது பெண்கள் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் சார்ஜாவில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.'ஏ' பிரிவில் இந்தியா, நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை அணிகளும், 'பி' பிரிவில் இங்கிலாந்து, வெஸ்ட்இண்டீஸ், தென்ஆப்பிரிக்கா, வங்காளதேசம், ஸ்காட்லாந்து அணிகளும் இடம் பெற்றுள்ளன. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.

இந்நிலையில், இந்த தொடரில் இன்று மாலை 3.30 மணிக்கு நடைபெற உள்ள லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து - இலங்கை அணிகள் மோதுகின்றன . தொடர்ந்து இரவு 7.30 மணிக்கு நடைபெற உள்ள ஆட்டத்தில் வங்காளதேசம் - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன.


Next Story