பெண்கள் டி20 உலகக் கோப்பை: ஆஸ்திரேலியா- நியூசிலாந்து அணிகள் இன்று மோதல்


பெண்கள் டி20 உலகக் கோப்பை: ஆஸ்திரேலியா- நியூசிலாந்து அணிகள் இன்று மோதல்
x
தினத்தந்தி 8 Oct 2024 2:29 AM GMT (Updated: 8 Oct 2024 3:36 AM GMT)

இன்றைய ஆட்டத்தில் வெற்றி காணும் அணிக்கு அரைஇறுதி வாய்ப்பு பிரகாசமாகி விடும்

துபாய்,

9-வது பெண்கள் டி20 உலகக் கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் சார்ஜாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் கலந்து கொண்டுள்ள 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. அதன்படி ஏ பிரிவில் இந்தியா, நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இலங்கை, பாகிஸ்தான் அணிகளும், 'பி' பிரிவில் இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், வங்காளதேசம், ஸ்காட்லாந்து அணிகளும் இடம் பெற்றுள்ளன.

இந்நிலையில், இன்றிரவு நடக்கும் 10-வது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி, நியூசிலாந்தை (ஏ பிரிவு)எதிர்கொள்கிறது. இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

அலிசா ஹீலி தலைமையிலான ஆஸ்திரேலியா தனது தொடக்க ஆட்டத்தில் இலங்கையையும், சோபி டிவைன் தலைமையிலான நியூசிலாந்து தனது முதல் ஆட்டத்தில் இந்தியாவையும் வீழ்த்தியது. இன்றைய ஆட்டத்தில் வெற்றி காணும் அணிக்கு அரைஇறுதி வாய்ப்பு பிரகாசமாகி விடும்

Live Updates


Next Story