மகளிர் டி20 கிரிக்கெட்; விஷ்மி குணரத்ன அபார ஆட்டம் - தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி வெற்றி பெற்ற இலங்கை


மகளிர் டி20 கிரிக்கெட்; விஷ்மி குணரத்ன அபார ஆட்டம் - தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி வெற்றி பெற்ற இலங்கை
x

Image Courtesy: @ICC

இலங்கை தரப்பில் அபாரமாக ஆடிய விஷ்மி குணரத்ன 65 ரன்கள் எடுத்தார்.

போட்செப்ஸ்ட்ரூம்,

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று ஆடி வருகிறது. இதில் முதலாவதாக டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல் டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலையில் இருந்தது.

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 2வது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 137 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதையடுத்து 138 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இலங்கை அணி 18.5 ஓவர்களில் 3 விக்கெட்டை மட்டும் இழந்து 138 ரன் எடுத்து வெற்றி பெற்றது. இலங்கை தரப்பில் அபாரமாக ஆடிய விஷ்மி குணரத்ன 65 ரன்கள் எடுத்தார்.

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் 1-1 என சமனில் உள்ளது. இதையடுத்து இவ்விரு அணிகளுக்கும் இடையிலான 3வது டி20 போட்டி ஏப்ரல் 3ம் தேதி நடைபெற உள்ளது.


Next Story