பெண்கள் டி20 கிரிக்கெட்; சாரா க்ளென் அசத்தல் பந்துவீச்சு...பாகிஸ்தானை வீழ்த்தி அபார வெற்றி பெற்ற இங்கிலாந்து


பெண்கள் டி20 கிரிக்கெட்; சாரா க்ளென் அசத்தல் பந்துவீச்சு...பாகிஸ்தானை வீழ்த்தி அபார வெற்றி பெற்ற இங்கிலாந்து
x

image courtesy: @englandcricket

இரு அணிகளுக்கும் இடையிலான 2வது டி20 போட்டி வரும் 17ம் தேதி நடைபெறுகிறது.

பர்மிங்காம்,

பாகிஸ்தான் பெண்கள் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று ஆடி வருகிறது. இதில் முதலில் டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டி20 போட்டி பர்மிங்காமில் நேற்று நடைபெற்றது,

இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் குவித்தது. இங்கிலாந்து தரப்பில் அதிகபட்சமாக ஹீதர் நைட் 49 ரன்கள் எடுத்தார். இதையடுத்து 164 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய பாகிஸ்தான் அணி இங்கிலாந்தின் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.

இறுதியில் பாகிஸ்தான் அணி 18.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 110 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இங்கிலாந்து 53 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இங்கிலாந்து தரப்பில் அபாரமாக பந்துவீசிய சாரா க்ளென் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என இங்கிலாந்து முன்னிலையில் உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான 2வது டி20 போட்டி வரும் 17ம் தேதி நடைபெறுகிறது.


Next Story