பெண்கள் பிரீமியர் லீக் இறுதிப்போட்டி : பெங்களூரு அணிக்கு எதிராக டாஸ் வென்ற டெல்லி பேட்டிங் தேர்வு
டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் மெக் லானிங் பேட்டிங்கை தேர்வு செய்தார்
புதுடெல்லி,
2-வது பெண்கள் பிரீமியர் லீக் (டபிள்யூ.பி.எல்.) கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் 23-ந் தேதி தொடங்கியது. 5 அணிகள் இடையிலான இந்த போட்டியில் ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் தலா 2 முறை மோதின. லீக் சுற்று முடிவில் முதலிடத்தை பிடித்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. உ.பி.வாரியர்ஸ் (6 புள்ளி) 4-வது இடமும், குஜராத் ஜெயன்ட்ஸ் (4 புள்ளி) கடைசி இடமும் பிடித்து வெளியேறின.லீக் முடிவில் 3-வது இடத்தை பெற்ற பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி வெளியேற்றுதல் சுற்றில் 2-வது இடம் பெற்ற நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்சை விரட்டி அடித்து முதல்முறையாக இறுதிப்போட்டியை எட்டியது.
இந்த நிலையில் கோப்பை யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி இன்று டெல்லியில் உள்ள அருண்ஜெட்லி ஸ்டேடியத்தில் நடக்கிறது. இதில் டெல்லி கேப்பிட்டல்ஸ் - பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் மெக் லானிங் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்கிறது.
டெல்லி:
மெக் லானிங் (கேப்டன் ), ஷபாலி வர்மா, ஆலிஸ் கேப்சி, ஜெமிமா ரோட்ரிக்ஸ், மரிசான் கேப், ஜெஸ் ஜோனாசென், அருந்ததி ரெட்டி, ராதா யாதவ், மின்னு மணி, தனியா பாட்டியா , ஷிகா பாண்டே.
பெங்களூரு :
ஸ்மிருதி மந்தனா (கேப்டன் ), சோபி டிவைன், எஸ் மேகனா, எலிஸ் பெர்ரி, திஷா கசட், ரிச்சா கோஷ் , மோலினக்ஸ், ஜார்ஜியா வேர்ஹாம், ஸ்ரேயங்கா பாட்டீல், சோபனா ஆஷா, ரேணுகா சிங்.