பெண்கள் ஒருநாள் கிரிக்கெட்: இந்தியாவுக்கு எதிராக டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பந்துவீச்சு தேர்வு


பெண்கள் ஒருநாள் கிரிக்கெட்: இந்தியாவுக்கு எதிராக டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பந்துவீச்சு தேர்வு
x

Image Courtesy: @BCCIWomen

இந்தியா - தென்ஆப்பிரிக்கா பெண்கள் கிரிக்கெட் அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் போட்டி இன்று நடக்கிறது.

பெங்களூரு,

இந்தியா - தென்ஆப்பிரிக்கா பெண்கள் கிரிக்கெட் அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடர் பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. தொடக்க ஆட்டத்தில் இந்தியா 143 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் போட்டி இன்று (புதன்கிழமை) நடைபெற உள்ளது. இதையடுத்து இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது.


Next Story