பெண்கள் கிரிக்கெட்...ஆஸ்திரேலிய அணியின் புதிய கேப்டனாக அலிசா ஹீலி நியமனம்...!

Image Courtesy: @ICC
ஆஸ்திரேலிய பெண்கள் கிரிக்கெட் அணியின் வெற்றிகரமான கேப்டனாக வலம் வந்த மெக் லானிங் கடந்த மாதம் தனது ஓய்வு முடிவை அறிவித்தார்.
சிட்னி,
ஆஸ்திரேலிய பெண்கள் கிரிக்கெட் அணியின் வெற்றிகரமான கேப்டனாக வலம் வந்த மெக் லானிங் கடந்த மாதம் தனது ஓய்வு முடிவை அறிவித்தார். இதனால் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகினர். 31 வயதான மெக் லானிங் ஆஸ்திரேலிய அணிக்காக 182 சர்வதேச போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டுள்ளார்.
இந்நிலையில் மெக் லானிங் ஓய்வு பெற்றதையடுத்து ஆஸ்திரேலிய அணிக்கு புதிய கேப்டனை நியமித்து அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் செய்தி வெளியிட்டுள்ளது. அதன்படி, அனைத்து வகை கிரிக்கெட்டுக்கும் ( டெஸ்ட், ஒருநாள், டி20) கேப்டனாக அலிசா ஹீலி செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தஹ்லியா மெக்ராத் துணை கேப்டனாக செயல்படுவார் எனவும் அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் செய்தி வெளியிட்டுள்ளது.
Related Tags :
Next Story






