பெண்கள் கிரிக்கெட்; டி20 தரவரிசை பட்டியலில் ஏற்றம் கண்ட வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான் வீராங்கனைகள்


பெண்கள் கிரிக்கெட்; டி20 தரவரிசை பட்டியலில் ஏற்றம் கண்ட வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான் வீராங்கனைகள்
x

Image Courtesy: @ICC

தற்போது வெளியிட்டுள்ள பட்டியலில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் பாகிஸ்தான் வீராங்கனைகள் ஏற்றம் கண்டுள்ளனர்.

துபாய்,

வெஸ்ட் இண்டீஸ் பெண்கள் கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று ஆடியது. இந்த தொடர் ஏப்ரல் 26ம் தேதி முதல் கடந்த 3ம் தேதி வரை நடைபெற்றது. இந்த தொடரை 4-1 என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீஸ் கைப்பற்றியது.

இந்நிலையில் இந்த தொடர் நிறைவடைந்ததை அடுத்து பெண்கள் டி20 கிரிக்கெட்டின் புதிய தரவரிசை பட்டியலை ஐ.சி.சி வெளியிட்டுள்ளது. தற்போது வெளியிட்டுள்ள பட்டியலில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் பாகிஸ்தான் வீராங்கனைகள் ஏற்றம் கண்டுள்ளனர்.

இதில் பேட்டிங் தரவரிசையில் வெஸ்ட் இண்டீசின் ஹேலி மேத்யூஸ் (742 புள்ளி) ஒரு இடம் ஏற்றம் கண்டு 3ம் இடத்திற்கு வந்துள்ளார். இந்த பட்டியலில் முதல் இரு இடங்களில் ஆஸ்திரேலியாவின் பெத் மூனி (769 புள்ளி), தஹ்லியா மெக்ராத் (762 புள்ளி) உள்ளனர்.

4வது இடத்தில் தென் ஆப்பிரிக்காவின் லாரா வோல்வார்ட்டும் (741 புள்ள்), 5வது இடத்தில் இந்தியாவின் ஸ்மிருதி மந்தனாவும் (715 புள்ளி) உள்ளனர். பந்துவீச்சு தரவரிசையில் பாகிஸ்தானி சதியா இக்பால் (734 புள்ளி) ஒரு இடம் ஏற்றம் கண்டு 3வது இடத்திற்கு வந்துள்ளார்.

இந்த பட்டியலில் முதல் இரு இடங்களில் இங்கிலாந்தின் சோபி எக்லெஸ்டோன் (759 புள்ளி), இந்தியாவின் தீப்தி சர்மா (736 புள்ளி) ஆகியோர் உள்ளனர். 4 மற்றும் 5வது இடத்தில் இங்கிலாந்தின் சார்லி டீன் (720 புள்ளி), வெஸ்ட் இண்டீசின் ஹேலி மேத்யூஸ் (710 புள்ளி) ஆகியோர் உள்ளனர்.

டி20 ஆல்ரவுண்டர்கள் தரவரிசையில் முதல் 5 இடங்களில் வெஸ்ட் இண்டீசின் ஹேலி மேத்யூஸ் (526 புள்ளி), நியூசிலாந்தின் அமெலியா கெர் (413 புள்ளி), ஆஸ்திரேலியாவின் ஆஷ்லே கார்ட்னெர் (401 புள்ளி), இந்தியாவின் தீப்தி சர்மா (386 புள்ளி), பாகிஸ்தானின் நிதா தார் (314 புள்ளி) ஆகியோர் உள்ளனர்.



Next Story